ஒரு பருக்கை சாதம் கூட மீதமாகாது கமகமக்கும கிராமத்து ஸ்டைல் அரைச்சு வச்ச மீன் குழம்பு இப்படி செய்யுங்க!

Summary: கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றைவிட உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் அது மீன் வகைதான். மீன்களில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. குழந்தைகளுக்கு சிறு வையத்திலேயே மீன் கொடுத்து பழகவேண்டும். அதிலும் மீன்களை விருப்பத்தை விட குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.மீன்குழம்பு என்றாலே கிராமத்து ஸ்டைல் தான் மிகவும் சுவையாக இருக்கும் ஏனென்றால் அவர்கள் மசாலாவை அரைத்து வைப்பார்கள். அதனால் தான் அவ்வளவு மனம், சுவை என்று அடைங்கியுள்ளது.இந்த குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து ருசித்திடுகள்.

Ingredients:

  • 800 கிராம் மீன்
  • எண்ணெய்
  • 7 சின்ன வெங்காயம்
  • 7 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • ¾ டீஸ்பூன் மிளகு
  • 1½ டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2½ டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 தக்காளி
  • ¼ கப் தேங்காய் துருவல்
  • புளி
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் வெந்தயம்
  • 12 சின்ன வெங்காயம்
  • கருவேப்பிலை
  • 1½ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1 டீஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள்

Equipemnts:

  • 1 சட்டி

Steps:

  1. மீன் துண்டுகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
  2. முதலில் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து பாதி அளவு வதங்கியதும், சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கியதும், மிளகாய் தூள், மல்லித்தூள், சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். பிறகு தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு தேங்காய் துருவல் சேர்த்து சிறுது நேரம் வதக்கியதும் இறக்கி ஆறவிடவும்.
  5. ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  6. அரைத்ததை சட்டியில் சேர்த்து அதனுடன் புளி சாறு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  7. பிறகு ஒரு சட்டியில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சேர்த்து வெங்காயம் பொன்னிறம் மாறும்வரை வதக்கவும்.
  8. வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து இஞ்சி பூண்டு பச்சைவாசனை போனதும், மஞ்சள் தூள், காஸ்மீரி மிளகாய் தூள், சேர்த்து மிதமான தீயில் வதங்கியதும். கரைத்து வைத்த மசாலா தண்ணிரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  9. 10 நிமிடம் கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து தேவை பட்டாள் மாங்காய் துண்டுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். மிதமான தீயில் வைத்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும். கடைசியாக சின்ன வெங்காயம், சிவக்க வதக்கி சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  10. இப்பொழுது சுவையான கிராமத்து அரைச்சு வச்ச மீன் குழம்பு தயார்.