மீந்து போன இட்லியில் இனி ருசியான இட்லி முட்டை உப்புமா இப்படி செய்து பாருங்க உப்புமா மிச்சமாகாது!

Summary: இட்லி உப்புமாவைதெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவருக்கும் தெரிந்த, அதே நேரத்தில் அனைவரும் சாப்பிடக் கூடிய உணவு  தான். உப்புமா சாப்பிடாதவர்கள் கூட இட்லியை உதிர்த்துபோட்டு இது போல செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மீதமான இட்லியில் எல்லார்வீட்டிலும் உப்புமா செய்வது வழக்கம் தான். ஆனால் ஒருமுறை இப்படி முட்டை சேர்த்து இட்லிமுட்டை உப்புமா செய்து பாருங்கள். இந்த இட்லி முட்டை உப்புமா, தனி சுவை இருக்கும்.இட்லி உப்புமாவோடு சேர்த்து இட்லிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை பாடாது . கொஞ்சம்வித்தியாசமானது. மிஸ் பண்ணாதீங்க இந்த ரெசிபியை நிச்சயம் செய்து பண்ணி பாருங்க.

Ingredients:

  • 4 இட்லி
  • கடுகு
  • உளுத்தம் பருப்பு
  • 2 முட்டை
  • கறிவேப்பிலை
  • 2 வெங்காயம்
  • கொத்தமல்லி
  • 3 ப.மிளகாய்
  • உப்பு
  • எண்ணெய்
  • சிறிய துண்டு இஞ்சி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இட்லியை நன்றாக உதிர்த்து கொள்ளவும்.
  2. பின்னர் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியைபோட்டு நன்றாக வதக்கவும்.
  3. வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளறவும். முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் அதில் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.
  4. அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும். இட்லி நன்றாக உதிர்ந்து உதிரியாக வரும் அப்போது கொத்தமல்லியை போட்டு இறக்கவும். சுவையான இட்லி முட்டை உப்புமா தயார்