சுவையான ஆப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி ?

Summary: சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா மில்க் ஷேக் மற்றும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் போன்றவை குழந்தைகள் அதிக விரும்பி குடிக்கும் மில்க் ஷேக். அடுத்த முறை உங்கள் குழந்தைகள் மில்க் ஷேக் கேட்கிறார்கள் என்று நீங்கள் அதை வாங்கி கொடுப்பதற்காக கொடுப்பதற்கு பதில் நீங்களே வீட்டில் செய்து கொடுக்கலாம். கடைகளில் விற்கும் மில்க் ஷேக் கெடாமல் இருப்பதற்காக சில ரசாயன பொருட்கள் சேர்த்து தயார் செய்து இருப்பார்கள். ஆனால் வீட்டில் இயற்கையான முறையில் எளிமையாக மில்க் ஷேக் தயாரிக்கலாம். ஆம், இன்று ஆப்பிள் மில்க் ஷேக் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் இதன் சவை உண்மையிலே அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 ஆப்பிள்
  • 10 பாதம் பருப்பு
  • 7 முந்திரி பருப்பு
  • 4 பேரீச்சம்பழம்
  • 250 ml பால்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஆப்பிள் மில்க் ஷேக் செய்வதற்கு தேவையான 10 பாதாம் பருப்புகளை ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முந்தைய நாள் இரவு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின்பு மறுநாள் மில்க் ஷேக் செய்யும் சமயத்தில் பாதாம் பருப்பை எடுத்து அதன் மேற்புற தோல்களை நீக்கிவிட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3. பிறகு நான்கு பேரிச்சம்பழம் எடுத்து அதன் கொட்டைகளை நீக்கிவிட்டு சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும் பின்பு ஒரு ஆப்பிள் பழத்தின் வெளிப்புற தோல்களை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 250 ml பாலை ஊற்றி நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு காய்ச்சிய பாலை குளிர வைத்து கொள்ளுங்கள்.
  5. பின் ஒரு மிக்ஸி ஜாரில் தோல் உரித்த பாதாம் பருப்பு, கொட்டையை நீக்கிய 4 பேரிச்சம்பழம், 7 முந்திரி பருப்பு, காய்ச்சிய பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
  6. பின்பு மில்க் ஷேக் இனிப்புக்கு நம் போட்ட பேரிச்சம் பழத்தின் இனிப்பு சரியான அளவில் இருக்கும். அதையும் மீறி உங்களுக்கு இனிப்பு பற்றவில்லை என்றால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
  7. உங்களுக்கு ஐஸ் போட்டு குடிக்க பிடிக்கும் என்றால் இதனுடன் சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து குடியுங்கள். அற்புதமான சவையில் இருக்கும். அவ்வளவுதான் சுவையான ஆப்பிள் மில்க் ஷேக் தயாராகிவிட்டது.