அடுத்தமுறை இப்படி பாலமேடு ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை இப்படி செய்து பாருங்க!

Summary: அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது ஆனியன் ரவா தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹோட்டல் பாணி வெங்காய ரவா தோசை என்பது பிரபலமான ரவா தோசை செய்முறையின் மாறுபாடு ஆகும், ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஆனியன் ரவா தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 2 cup ரவை (வறுத்தது)
  • 1 cup அரிசி மாவு
  • ½ cup மைதா மாவு
  • 3 cup புளித்த தோசை மாவு
  • 1 tsp மிளகு
  • 1 tsp ஜீரகம்
  • 2 வெங்காயம்
  • 1 tsp கடலைப்பருப்பு
  • 5 பச்சை மிளகாய்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு தண்ணீர்

Equipemnts:

  • 1 தோசை கல்
  • 1 கரண்டி

Steps:

  1. ஆனியன் ரவா தோசை செய்வதற்கு முதலில் மைதா மாவு, ரவை, அரிசிமாவு, நேரம் வைக்கவும். தோசை மாவு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
  2. பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் மிளகு, ஜீரகம், வெங்காயம், கடலைப் பருப்பு, பச்சை மிளகாய ஆகியவற்றைப் போட்டு தாளித்து மாவில் போட்டுக் கலந்து கொள்ளவும்.
  3. அதன் பின்னர் தோசைக்கல்லில் கல்லின் ஓரத்தில் இருந்து மாவை ஊற்றி, எண்ணெயை ஊற்றி ஒரு பக்கம் மட்டும் வேக வைத்து எடுக்கவும். சுவையான ஆனியன் ரவா தோசை ரெடி.