கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!

Summary: முன்பெல்லாம் தானியங்கள் அதிக அளவில் சமைத்து சாப்பிட்டு வந்தோம் வெளி உணவுகள் கிடையாது. ஆனால் இன்று அப்படியெல்லாம் எதுவும் கிடையாது பெரும்பாலும் பிள்ளைகளுக்கு நல்ல சத்தான ஆகாரங்களைகொடுத்தாலே அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்புடனும் இருப்பார்கள் அந்த வகையில்இந்த புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலையை தோசை குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவு. வாரத்தில்ஒரு நாளோ அல்லது மாதத்தில் இரண்டு நாட்கள் இந்த கொண்டைக்கடலை தோசையை செய்து கொடுப்பதுகுடும்பத்தில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலுக்கு ஆரோக்கியம்தரும் கொண்டைக்கடலை தோசை எப்படி சுடுவது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 1 கப் கொண்டைக்கடலை
  • 4 காய்ந்தமிளகாய்
  • 2 பூண்டு
  • சீரகம்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. கொண்டைக்கடலையை 5 மணி நேரம் ஊறவைத்து பூண்டு. காய்ந்த மிளகாயுடன் கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.
  2. கடாயை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்து மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி தோசையாக வார்த்து எண்ணெய் விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
  4. சூப்பரான சத்தான கொண்டைக்கடலை தோசை ரெடி