எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை சிக்கன் வாங்கி கறிவேப்பிலை சிக்கன் ப்ரை இப்படி செய்து பாருங்க!

Summary: சிக்கனை என்ன தான் விரும்பி சாப்பிட்டாலும், வீட்டில் கிரேவி போன்றவைகளை அவ்வளவாக விரும்பி உண்பதில்லை. நீங்கள் ஒரு முறை இப்படி சமைத்து பாருங்கள். இந்த கறிவேப்பிலை சிக்கன், ஹோட்டல் சிக்கன்சுவையில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இதில் மிளகு, இஞ்சி, பூண்டு, மஞ்சள், போன்ற பொருட்களை சேர்த்து செய்வதால், நம் குழந்தைகளின் உடலுக்கும் நல்லது.சிக்கனில் உள்ள வைட்டமின்கள் அதிக ப்ரோடீன் ,தசைகளை வலுவடையச் செய்யும். சிக்கன் பொதுவாகவே அனைவருக்கும் பிடிக்கும்..அது மட்டுமின்றி கறிவேப்பிலை சிக்கன் நல்ல சுவையான  ஒரு உணவும் கூட, இந்த சிக்கன் வைத்து ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கறிவேப்பிலை சிக்கன் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல்குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

Ingredients:

  • 250 கிராம் சிக்கன்
  • எண்ணெய்
  • 1 கட்டு கறிவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 டீஸ்பூன் மல்லித் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகுத் தூள்
  • உப்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பெளலில் சிக்கனைப் போட்டு, அத்துடன் மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித் தூள், மிளகுத் தூள் தலா ஒரு ஸ்பூன் சேர்த்து, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், சேர்த்து பிரட்டி 6 மணிநேரம் ஃப்ட்ரிட்ஸில் வைத்து ஊற வைக்கவும்.
  2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து பேப்பர் டவலில் வைத்துக் கொள்ளவும்.
  3. பின்பு அதே எண்ணெயில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை மொறுமொறுவென்று பொரித்து, பேப்பர் டவலில் வைத்துக் கொள்ளவும். பின் பச்சை மிளகாயை தனியாக பிரித்து வைத்து, கறிவேப்பிலையை மட்டும் கையால் நொறுக்கி விட வேண்டும்.
  4. பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகள், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தோடு சிறிது மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு பிரட்டி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், கறிவேப்பிலை சிக்கன் ரெடி