காரசாரமான வெண்டைக்காய் மசாலா இப்படி செஞ்சு பாருங்க! சப்பாத்தி ,சாதத்திற்கும் அருமையாக இருக்கும்!

Summary: ஒரேமாதிரியான வெண்டைக்காய் பொரியல்,சாம்பார் என்ற உணவை சாப்பிட்டு அலுத்துக் விடுகிறோம் . நம் வாழ்வில் எப்படி மசாலா தேவைப்படுகிறதோ, அதே போல சுவையிலும் மசாலா தேவை. நீங்கள் அனைவரும் வெண்டைக்காய் வறுவல் சாப்பிட்டிருப்பீர்கள். இந்த வெண்டைக்காய் மசாலா ஒருமுறை செய்து பாருங்கள்.இந்த பிந்தி மசாலா சுவை காரமான சுவையுடன் அருமையாக இருக்கும். ரொட்டி, பரோட்டாவுடன் சாப்பிடலாம். இது உங்கள் சுவையை இரட்டிப்பாக்கும். வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். வீட்டிலேயே பிந்தி மசாலா ஹோட்டல் சுவையில்  ஒருமுறை இப்படி செய்து பாருங்கள். இந்த பிந்தி மசாலாசெய்முறையை பார்த்து அதே முறையில் செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள்.

Ingredients:

  • 1/4 கிலோ வெண்டைக்காய்
  • 1 தேக்கரண்டி சாட் மசாலா
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 மேசைக்கரண்டி கடலை மாவு
  • 1 தேக்கரண்டி அரிசி மாவு
  • எண்ணெய்
  • 1 வெங்காயம்
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 4 தக்காளி
  • 1 கைப்புடி புதினா
  • 2 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1 தேக்கரண்டி கசூரி மேத்தி
  • 1 காய்ந்த மிளகாய்
  • 15 முந்திரி
  • 1 மேசைக்கரண்டி வெண்ணெய்
  • கொத்தமல்லி
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வெண்டைக்காயை கழுவி வில்லையாக நறுக்கி நன்கு பரப்பி காய வைக்க வேண்டும். மாலையில் செய்வதென்றால் காலையிலே வெட்டி காய வைத்து விட வேண்டும்.
  2. அதனுடன் பொரிப்பதற்கு கூறியவை அனைத்தையும் சேர்த்து கிளறி வைக்க வேண்டும். கடலை மாவு ஏதாவது சிறிதளவு ஈரம் இருந்தாலும் எடுத்து விடும்.
  3. எண்ணெய் காய வைத்து பொரித்தெடுத்து எண்ணெய் உறுஞ்சும் பேப்பரில் போட்டு வைக்கவும். வெண்டைக்காய் பச்சையாக இருக்கும் போதே எடுத்து விட வேண்டும்.
  4. ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, புதினா, கரம் மசாலா, பொடித்த காய்ந்த மிளகாய், கசூரி மேத்தி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
  5. எண்ணெய் சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கும் வாணலியில் சேர்த்து போது நேரிடையாக வதக்கவும்.
  6. இப்பொழுது தக்காளி கலவையை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும். மசாலாவிற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரமே வதங்கி விடும்.
  7. அதனுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது மற்றும் வெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். முந்திரி சேர்த்தவுடன் தீயை குறைத்து வைக்கவும். இல்லையென்றால் அடிபிடிக்கும். சிறிதளவு தண்ணீர் கூட தெளித்துக் கொள்ளலாம்.
  8. பிறகு பொரித்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். மசாலா வெண்டைக்காயில் நன்கு ஏறியதும் இறக்கவும்.
  9. இறக்கியதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும். சூடு சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம். முந்திரி மற்றும் வெண்ணெய் சேர்க்காமலும் செய்யலாம்.