முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு இப்படி செய்து பாருங்க! சுட சுட சாதமுடன் ஊற்றி சாப்பிட ருசியாக இருக்கும்!

Summary: முருங்கைக்காய் கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்லவலுவைக் கொடுக்கும். முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தம் சுத்தம் அடையும்.இந்த முருங்கைக்காய் தேங்காய்ப்பால் குழம்பு ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்.அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்தபதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 3 நறுக்கிய முருங்கைக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பச்சைமிளகாய்
  • 3 பல் பூண்டு
  • 1 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் கப்
  • அரை கப் திக்கான தேங்காய்ப் பால்
  • எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுந்து
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் முருங்கைக்காயைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்ளவும்.
  2. பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,
  3. அத்துடன் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, தூள் வகைகளைச் சேர்த்துப் பிரட்டவும்.
  4. பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிட்டு, பொரித்த முருங்கைக்காயைச் சேர்த்து மூடி வைத்து சிறு தீயில் 3 நிமிடங்கள் வேகவிடவும்.
  5. முருங்கைக்காய் வெந்ததும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
  6. சுவையான முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு தயார்.