க்ரிஸ்பியான இறால் தேங்காய் ப்ரை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

Summary: க்ரிஸ்பி இறால் தேங்காய் ப்ரை மிகவும் மொறுமொறுப்பாகவும் வேறுவிதமான சுவையிலும் இருக்கும். அடஎன்ன இது பெயர்களே வித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? அதேபோல் இதன் சுவையும்மிகவும் வித்தியாசமாகத் தான் இருக்கும் . சுடச்சுட டீ காபி குடிக்கும்போது பக்கத்தில் இப்படி ஒரு க்ரிஸ்பி இறால் தேங்காய் ப்ரை இருந்தால் வேறு என்ன சொர்க்கம்வேணும். இறால் வைத்து மிக மிக எளிமையாக மொறு மொறு இறால் தேங்காய் ப்ரை எப்படி செய்வதுஎன்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த மழைக்காலத்தில்இந்த ரெசிபியை மிஸ் பண்ணவே பண்ணாதீங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Ingredients:

  • 1/4 கிலோ இறால்
  • 4 தேக்கரண்டி கடலை மாவு
  • 4 தேக்கரண்டி அரிசி மாவு
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 2 தேக்கரண்டி சீரகத் தூள்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • உப்பு
  • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தேங்காய் துருவல் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்த இறாலுடன் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் வைக்கவும்.
  2. ஒரு தட்டில் தேங்காய் துருவலுடன் சிறிது அரிசி மாவை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  3. மசாலாவுடன் பிரட்டி வைத்திருக்கும் இறாலை தேங்காய் துருவலில் பிரட்டிக் கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலை போட்டு சிறு தீயில் நன்றாக வெந்ததும் பொரித்து எடுக்கவும்.
  5. சுவையான க்ரிஸ்பி இறால் தேங்காய் ப்ரை ரெடி.