எத்தனை தோசை சாப்பிட்டாலும் பத்தாது மொறு மொறுனு ராகி தோசை இப்படி செய்து பாருங்க!

Summary: நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த இன்ஸ்டென்ட் ராகி தோசையை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று ராகி தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ராகி தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம் தோசையும் பிரமாதமாக மொறு மொறுப்பாக இருக்கும். இந்த தோசை உடன் நீங்கள் சாம்பார் சட்னி எது வைத்து சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் கார சட்னியுடன் நீங்கள் இந்த தோசையை சாப்பிடும் பொழுது அதன் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

Ingredients:

  • 1 கப் ராகி
  • 1 கப் இட்லி அரிசி
  • 1/2 கப் உளுந்தம் பருப்பு
  • 1 tsp வெந்தயம்
  • உப்பு

Equipemnts:

  • 1 மிக்சி ஜார்
  • 1 பெரிய பவுல்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த ராகி, இட்லி அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் இவற்றை சேர்த்து, ஒரு மூன்று முறை நன்கு அலசி எடுக்கவும்.நல்ல தண்ணீர் ஊற்றி ஒரு ஐந்து மணி நேரம் ஊற விடவும்.
  2. ஐந்து மணி நேரம் கழித்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் நைசாக அரைத்து எடுக்கவும்.அரைத்து எடுத்ததை ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு 7 மணி நேரம் மூடி வைக்கவும்.
  3. 7 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் மாவு நன்றாக புளிச்சிருக்கும். இப்போது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப., இட்லியோ அல்லது தோசையோ ஊற்றிக் கொள்ளலாம்.
  4. தோசை ஊற்றும்போது, மாவை நைசாக ஊற்றி., அப்படியே சுற்றி நல்லெண்ணெய் சேர்த்து, தோசையை பிரட்டி போட்ட எடுத்தால், மொறு மொறு என ராகி தோசை தயார்.