ஸ்டார் ஹோட்டல் சுவையில் காளான் குருமா செய்வது எப்படி ?

Summary: காளான் குருமாவானது சப்பாத்தி, பூரி, சாதம்,போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இதை செய்வது மிகவும் சுலபமாக இருக்கும். உங்களுக்கு காளான் குருமா எப்படி செய்பதென்று குறிப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கு அதை பார்த்து நீங்களும் வீட்டில் சமைத்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவர்க்கும் பிடிக்கும்.

Ingredients:

  • 200 கிராம் காளான்
  • 1 பெரியவெங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணைய்
  • ½ டேபிள் ஸ்பூன் கடுகு
  • ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
  • ½ டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • வெந்தயம்
  • ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • கருவேப்பிலை
  • உப்பு
  • கொத்தமல்லி
  • ½ கப் துருவியஸ் தேங்காய்
  • 10-12 முந்திரி
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • மிக்ஸி

Steps:

  1. முதலில் முந்திரியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அதனுடன் தேங்காயை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து, நான்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சேர்த்து தாளிக்க வேண்டும்.
  3. பின்னர் அதில் சீரகம், வெந்தயம், உளுத்தம் பருப்பு, சேர்த்து நன்கு வறுத்து, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  4. அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மேன்மைமையாகும் வரை வதக்க வேண்டும்.
  5. பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
  6. பின்பு அதில் காளானை சேர்த்து குறைவான தீயில் வைத்து 5-6 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
  7. பின் அதில் அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  8. மசாலா நன்கு வதங்கியதும், அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லி இலைகளைத் தூவினால், சுவையான காளான் குருமா தயார்.