பாரம்பரிய சுவை மாறாமல் மணமாக கருப்பட்டி காபி இப்படி ஒரு தடவை செய்து பாருங்க!

Summary: வெள்ளை சர்க்கரையின் வருகையால் நமது உணவுப் பழக்க வழக்கங்களில் பல மாற்றங்கள் வந்துவிட்டனர். அப்படி நாம் மறந்த ஒன்றுதான் இந்த கருப்பட்டி காபி இந்த கருப்பட்டி காப்பியை செய்வதற்கு சில டிப்ஸ் இருக்கின்றது. ஆம், நீங்கள் கருப்பட்டி காபியில் சூடான பாலை ஊற்றினால் திரைந்து விடும். ஆகையால் முதலில் பாலை காய்ச்சி தனியாக வைத்துக்கொண்டு அதன் பிறகு காபி போட்டு அதனுடன் ஆறிய பாலை சேர்க்க வேண்டும். அப்படி இது போல் காபி செய்தால் அந்த காபியின் சுவையும் மணமும் அட்டகாசமான முறையில் இருக்கும்.

Ingredients:

  • 200 ML பால்
  • 3 அச்சு கருப்பட்டி
  • 2 டம்பளர் தண்ணீர்
  • 2 tbsp காபி தூள்

Equipemnts:

  • 2 டீ பாத்திரம்
  • 2 டம்பளர்

Steps:

  1. முதலில் ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனோடு 200 ML பால் சேர்த்து நன்கு காய்ச்சிக் கொள்ளுங்கள். பால் நன்கு கொதித்து வந்தவுடன் அடுப்பை அணைத்து நாம் காய்ச்சிய பாலை நன்கு குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின் நாம் வைத்திருக்கும் மூன்று அச்சு கருப்பட்டி துண்டுகளை பொடியாக தட்டி தூளாக்கி ஒரு பவுளில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும்.
  3. பின் அதனுடைய நாம் தூளாக்கிய கருப்பட்டியையும் சேர்த்து தண்ணீரை நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன். நம் சேர்த்த கருப்பட்டிகள் முற்றிலும் கரைந்து விடும்.
  4. கருப்பட்டி கரைந்த உடன் அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு காபித்தூள் சேர்த்துக் கொள்ளவும். நீங்கள் காபித்தூள் வீட்டில் வழக்கமாக எதை உபயோகப்பீர்களை அதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  5. பின் காபி நன்றாக கொதித்து வந்தவுடன் இரண்டு டம்ளரில் அரை டம்ளர் அளவிற்கு காபியை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்பு மீதி பாதியில் காய்ச்சி குளிர வைத்த பாலை ஊற்றிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான கருப்பட்டி காபி தயாராகி விட்டது.