ருசியான சிவப்பரிசி ஆப்பம் ஈஸியாக வீட்டில் இப்படி செய்து பாருங்க! ஆப்ப சோடா எதுவும் சேர்காமலே செய்யலாம்!

Summary: நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின்நலத்தை மேம்படுத்தும். தினமும் காலையில் இட்லி தோசை மற்றும் பூரி போன்றவற்றை மட்டுமேஅதிகமாக நாம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதைவிட சுவையான மற்றும் ஆரோக்கியமான டிபன் வகைதான் சிவப்பரிசி ஆப்பம்தற்போதுள்ள குழந்தைகளுக்கு இந்தமாதிரியான சிவப்பரிசி ஆப்பம் ஊற்றி காலையில் குடுத்து பாருங்கள் தினமும் அவர்கள் அதை விரும்பி கேட்பார்கள். ஆப்பம்தயார்செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

Ingredients:

  • 200 கிராம் சிவப்பரிசி
  • 200 கிராம் பச்சரிசி
  • 1 கைப்பிடி உளுத்தம்பருப்பு
  • 2 டீஸ்பூன் வெந்தயம்
  • உப்பு

Equipemnts:

  • 1 ஆப்ப கடாய்

Steps:

  1. சிவப்பரிசி,பச்சரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும்.
  3. பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும்.
  4. ஆப்பக் கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும்.
  5. சிவப்பரிசி சேர்ப்பதால் ஆப்ப சோடா தேவையில்லை. நன்கு மிருதுவாக வரும். ருசியாகவும் இருக்கும். சிவப்பரிசியில் சத்துகள் பல அடங்கியுள்ளன.