பூ போன்ற மிருதுவான பீஸ் மசாலா இட்லி இப்படி செய்து பாருங்க அசத்தலான சுவையில்!

Summary: ஆரோக்கியமானஉணவு என்றாலே எப்போதுமே இட்லி தான். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்றஒரு நல்ல உணவு. இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் செய்துகொடுக்க முடியும். இட்லியே ஆரோக்கியமானது தானே இதில் என்ன இன்னும் ஆரோக்கியம் என்றுகேட்கிறீர்களா? ஆமாம் இதுவரையில் நாம் வெறும் இட்லி மட்டும் சாப்பிட்டிருப்போம். இப்போது இந்த இட்லியில்கொஞ்சம் காயும் சேர்த்து சாப்பிடும் போது அது இன்னும் ஆரோக்கியம் தானே.

Ingredients:

  • இட்லி மாவு
  • 1 தக்காளி
  • 5 சின்ன வெங்காயம்
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 1/2 தேக்கரண்டி உளுந்து
  • கொத்தமல்லி தழை
  • தேங்காய்
  • 4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • உப்பு

Equipemnts:

  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிறிது நேரம் கழித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக மாறியதும், தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
  3. நன்கு வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள கலவையை இதில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் பட்டாணியை சேர்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.
  4. பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைத்து ஆற விடவும். ஆறிய பின்னர் இட்லி மாவில் சேர்த்து ஊற்றவும். 10 நிமிடம் கழித்து தக்காளி சட்னி உடன் சூடாக பரிமாறலாம்