திரும்ப திரும்ப ஒரே சட்னி வைக்காமல் பீர்க்கங்காய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க! 2 இட்லி சேர்த்தூ சாப்பிடுவாங்க!

Summary: எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சுவை மிகுந்த செய்ய பீர்க்கங்காய் இந்த சுவையான காய்கறியை நமது வழக்கமான உணவில் சேர்த்து அதன் பலனைப் பெற முயற்சிப்போம்.இந்த பச்சை சதைப்பற்றுள்ள காய்கறி உள்ளார்ந்த சுவை கொண்டது. எனவே, சாம்பார், பருப்பு, சட்னி மற்றும் ரைத்தா போன்ற பல வழக்கமான உணவில் பயன்படுத்தப்படுகிறது. பீர்க்கங்காய் எளிதில் சமைப்பதால், இந்த சட்னி 10 நிமிடங்களுக்குள் தயாரிக்கப்படலாம். இது மிகவும் எளிமையான செய்முறையாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீர்க்கங்காய் சட்னி விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1 பீர்க்கங்காய்
  • 1 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • ½ tbsp உளுத்தம் பருப்பு
  • ½ tbsp கடலை பருப்பு
  • 1 புளி
  • 3 காய்ந்த மிளகாய்
  • 2 பூண்டு
  • 2 tbsp எண்ணெய்
  • 15 gm கொத்தமல்லி
  • உப்பு
  • ¼ கடுகு
  • ½ உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை
  • 2 tbsp சிறிதுஎண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி

Steps:

  1. பீர்க்கங்காய் சட்னி செய்ய முதலில் பீர்க்கங்காய் ,சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
  2. பின்னர் அதை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும். பின் அதே வாணலியில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
  3. பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் ,பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும். கடைசியாக மல்லி இலை சேர்த்து இறக்க வேண்டும்.
  4. பிறகு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு , சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரகர பதத்தில் அரைக்க வேண்டும்.
  5. தாளிக்க சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றவும்.