கல்யாண வீட்டு காரசாரமான உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி ?

Summary: வீட்டில் உள்ளவர்களும் நாம் வீட்டில் பொரியல் வைக்கும் போது சாப்பிடாமல் குறை சொல்லுவார்கள். ஆனால் அதை பொரியலை கல்யாண வீட்டில் வைத்தால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள் அந்த அளவிற்கு சுவையாக இருக்கும். இன்றும் அதை போல் கல்யாண வீடுகளில் வைக்கும் உருளைக்கிழங்கு பொரியல் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். இதே போன்ற கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொரியலை நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்து கொடுத்தால். பின் சாப்பிட்ட அனைவரும் உங்கள் பொரியலுக்கு அடிமை அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 3 உருளை கிழங்கு
  • 2 tbsp எண்ணெய்
  • ½ tbso சோம்பு
  • 7 பல் பூண்டு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 வரமிளகாய்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp குழம்பு மசாலா பொடி
  • 1 tbsp மல்லி தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • ½ tbsp காஷ்மீர் மிளகாய்தூள்
  • ½ டம்பளர் தண்ணீர்
  • உப்பு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட மூன்று உருளைக்கிழங்குகளை நான்கு தண்ணீரில் கழுவி பின் குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பின் கிழங்கையும் சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் தோல் பகுதிகளை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனோடு அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளவும். சோம்பு நன்றாக் பொரிந்து வந்தவுடன்.
  3. நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை சேர்த்துக் கொள்ளவும். பின் பூண்டு நன்றாக வறுபட்டு மணம் வந்ததும். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  4. பின்பு வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து வதக்கவும், தக்காளி வேகமாக வதங்குவதற்கு அரை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  5. பின்பு தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் குழம்பு மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, காஷ்மீர் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும். இதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்கிக் கொள்ளுங்கள்.
  6. பின் எண்ணெய் தனியாக பிரிந்து வரும் சமயத்தில் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விடவும். பின் உருளைக்கிழங்கு மசாலாவுடன் நன்கு சேர்ந்ததும் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து கடாயை இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொரியல் இனிதே தயாராகிவிட்டது.