பூரி, சப்பாத்திக்கு இனி ஆலு மட்டர் மசாலா இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Summary: இந்தியாவில் பிரபலமான சைவ ரெசிபிகளுக்கு பஞ்சம் இல்லை, ஆனால் ஆலு மட்டர் பொதுவாக தயாரிக்கப்படும் ஒன்றாகும். அடிப்படை பொருட்கள் எளிதில் கிடைப்பது மற்றும் இந்த உணவை தயாரிப்பதில் எளிமை, இது மிகவும் சுவையாக இருப்பது ஆகியவை அனைத்தும் அதன் பிரபலத்திற்கு பங்களிக்கின்றன. ஆலு மட்டர் கிரேவி என்பது உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியுடன் தயாரிக்கப்படும் ஒரு உன்னதமான பஞ்சாபி உணவாகும்.

Ingredients:

  • 300 கிராம் உருளைக்கிழங்கு
  • 150 கிராம் வேகவைத்த பச்சை பட்டாணி
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் காஸ்மீர் சிவப்பு மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 2 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1/4 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம்
  • 1/2 கப் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 துண்டு பட்டை
  • 4 டீஸ்பூன் கீரிம்
  • உப்பு
  • 1 டீஸ்பூன் கசூரிமேத்தி
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை
  • 1 கைப்பிடி நறுக்கிய கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. காஷ்மீரி மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், ஆம்சூர் பௌடர், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
  4. அதே வாணலியில் சீரகம், பட்டை, வதக்கி,கடலைமாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. கரைத்த மசாலாவை ஊற்றி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  6. இதனுடன் உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் 1 கப் மிதமான சூடான நீர் சேர்த்து 5 நிமிடம் மூடி வேக வைக்கவும்.
  7. பின்னர் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து 1நிமிடம் வேக விடவும். பின் கசூரிமேத்தி, கரம் மசாலா தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும். இது சப்பாத்தி, பூரி, நான் ஏற்றது.