கமகமனு முருங்கைக்காய் இறால் மசாலா இப்படி செய்து பாருங்! ஒரு பருக்கை சாதம் கூட மிச்சமாகது!

Summary: முருங்கைகாயின் வாசனைக்கே பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.அந்த முருங்கைக்காயில் இறாலை சேர்த்தால் அவ்வளவு அருமையான மனம் இருக்கும். இறாலை முருங்கைகாயுடன்சேர்த்து செய்வதால்இறால், முருங்கைகாயின்சத்து  சேர்த்து கிடைக்கப்பெறும்.முருங்கைகாய் இறாலுடன்சேர்ப்பதால் இறாலின்வாசம் முருங்கைகாயில்சேர்ந்து முருங்கைகாய்சாப்பிடாதவர்கள் கூடஇதை விரும்பிசாப்பிடுவார்கள்.  முருங்கைகாய் இறாலுடன்சேர்த்து செய்வதால்குழந்தைகளுக்கு மிகவும்பிடிக்கும் முருங்கைகாயின்சத்தும் குழந்தைகள்உடலுக்கு சேரும்.வாருங்கள் இந்தமுருங்கைக்காய்இறால் மசாலா எவ்வாறு செய்யவேண்டும் என்பதைபற்றி இந்தபதிவின் மூலம்தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 3 முருங்கைக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1 தேக்கரண்டி சோம்பு தூள்
  • 100 கிராம் இறால்
  • 2 மேசைக்கரண்டி தேங்காய் விழுது
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 மேசைக்கரண்டி எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. இறாலைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி இரண்டாக வகுந்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.  பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முருங்கைக்காய், பச்சை மிளகாய், இறால், பாதி அளவு வெங்காயம், உப்பு மற்றும் கரம் மசாலா போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி போடாமல் ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
  3. ஒரு நிமிடம் கழித்து மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவிட்டு, மூடியை திறந்து ஒரு முறை கிளறிவிடவும். முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் தேங்காய் விழுது போட்டு 3 நிமிடங்கள் கிளறிவிடவும்.
  4. முருங்கைக்காய் மசாலாவுடன் தேங்காய் விழுது ஒன்றாக சேர்ந்து சற்று கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
  5. பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, சோம்பு தூள் சேர்த்து ஒரு முறை வதக்கிவிடவும்.
  6. வதக்கிய வற்றைமுருங்கைக்காய் மசாலாவுடன் சேர்த்து கிளறவும். சுவையான முருங்கைக்காய் இறால் மசாலா தயார்.