ரசம் சாதம், சாம்பார் சாதமுடன் சாப்பிட ருசியான கிராமத்து பருப்பு துவையல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

Summary: எல்லா வகையான கலவை சாதத்திற்கும் ரொம்பவும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த பருப்பு துவையல்செய்வதும் ரொம்பவும் எளிதாக இருக்கும். தேங்காய் எல்லாம் போட்டு செய்வதால், இதன் ருசிஅபரிமிதமாக இருக்கும். பத்து நிமிடத்தில் செய்யும் சூப்பரான ஒரு பருப்பு துவையல் ரெசிபிதான் இது. நாம்  செய்யக்கூடியபருப்புசாம்பார்விட இதன் சுவை முற்றிலும் வித்தியாசமானது. வீட்டில் இருக்கும் மசாலா பொருட்களை வைத்தேஇந்த சுவையான சூப்பரான பருப்பு துவையல் எளிதாக செய்யலாம்.வாங்க ரெசிபியைபார்க்கலாம்.

Ingredients:

  • 1/2 கப் துவரம்பருப்பு
  • 2 டீஸ்பூன் தேங்காய்
  • 1 சிவப்பு மிளகாய்
  • 5 மிளகு
  • 1 பல் பூண்டு
  • 3 கறிவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, பருப்பு, தேங்காய், சிவப்பு மிளகாய், மிளகு, கறிவேப்பிலைமற்றும் பூண்டு ஆகியவற்றை வறுக்கவும்.
  2. பருப்பு பொன்னிறமாக மாறும் வரை இதை வறுக்கவும். பருப்பை கருக்கிவிட கூடாது. ஸ்டோவை  அணைத்து, ஒரு தட்டுக்கு மாற்றவும், அதை குளிரவிடவும்.
  3. கலவை ஆறியதும் உப்பு சேர்த்து மிகக் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி கொரகொரப்பாக அரைக்கவும். சூடான சாதம், நல்லெண்ணெய் உடன் பரிமாறவும்