Summary: ஒரு சிலருக்குகறியை விட மீன் மற்றும் கருவாட்டின் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி கருவாட்டுபிரியர்களுக்கு மாசிக்கருவாடு சம்பல் என்றால் சொல்லவே வேண்டாம், நாவில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். மாசிக்கருவாடுஎன்பது சுத்தம் செய்யப்பட்ட சூறை மீனை உப்பு நீரில் வேகவைத்து மண்ணில் புதைத்து வைத்துசெய்யப்படுவது. . தமிழகத்தில், தூத்துக்குடி பகுதியிலும் கீழத்தஞ்சை மக்களிடமும் இந்தசம்பலுக்குச் செல்வாக்கு இருக்கிறது. சென்னையிலும் கிடைக்கிறது. விலை கொஞ்சம் அதிகம்,ஆனால் அதன் ருசியை அறிந்தவர்கள் விலையைப் பற்றிக் கவலை படுவதில்லை. கடல் உணவுகளிலேயே எளிமையாகசெய்யக்கூடியது. ஐந்து நிமிடத்தில் செய்து விடலாம். இது இட்லி தோசை, ஆகியவற்றுக்குஅசத்தலான காம்போவாக இருக்கும். இதன் சுவை அபாரமாக இருக்கும்.