ஹோட்டல் சரவணபவன் ஸ்டைல் சாம்பார் இப்படி செய்து பாருங்க! வீடே மணமணக்கும்!

Summary: ஒரு சில ஹோட்டல்களில் மிகவும் சுவையாக இருக்கின்ற உணவு வகைகளை நாமும் வீட்டிலேயே செய்ய முடியும். அதற்காகஅவர்கள் செய்யும் சிறிய குறிப்புகளை மட்டும் அறிந்து கொண்டால் போதும். அப்படி சரவணபவன்ஹோட்டல் சாம்பார் ரகசியம் என்னவென்றும், அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.சரவணபவன் ஹோட்டலில் இந்தசாம்பார் வேறு வித வித்தியாசமான சுவையுடன் சாப்பிட ரொம்பவே பிரமாதமாக இருக்கும்.இதை திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவோம். இப்படி ஒரு நல்ல சுவையான சாம்பார்ஹோட்டல் சரவண பவனில் செய்வது போல அதே ருசியுடன் வீட்டில் எப்படி செய்வது என்பதை இந்தசமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Ingredients:

  • 1/4 கப் துவரம்பருப்பு
  • 2 கத்தரிக்காய்
  • 1 முருங்கைக்காய்
  • 10 சாம்பார் வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பச்சைமிளகாய்
  • உப்பு
  • புளி
  • 2 தேக்கரண்டி பொட்டுக்கடலை
  • 1 தக்காளி
  • 1 தேக்கரண்டி தேங்காய்
  • 4 தேக்கரண்டி சாம்பார் பொடி
  • பெருங்காயம்
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 சிறிது சீரகம்
  • 1/4 சிறிது உளுத்தம் பருப்பு
  • 2 வற்றல் மிளகாய்
  • கறிவேப்பிலை
  • மல்லித்தழை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு நைசாக அரைத்து எடுக்கவும். புளியுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
  2. காய்கறிகளை பொடியாக நறுக்கவும், சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். குக்கரில் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
  3. வேக வைத்த பருப்புடன் மேலும் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நறுக்கிய காய்கறிகள், பச்சை மிளகாய், தக்காளி, பாதி வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.
  4. அரைத்த விழுது மற்றும் புளிக்கரைசலை வெந்த பருப்பு காய்க் கலவையில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து பெருங்காயம், கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  5. சாம்பரை அதில் ஊற்றி மல்லித் தழை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சுவையான ஹோட்டல் சாம்பார் தயார்.