புதினா மல்லி சட்னி ஒரு தடவை இப்படி செய்து பாருங்க! பின் நீங்களே அடிக்கடி வீட்டில் செய்வீங்க!

Summary: ரெண்டே நிமிஷத்துலதேங்காய் சேர்க்காம, வெறும் ஒரு கைப்பிடி மல்லி புதினாவை மட்டும் வெச்சு நல்ல சூப்பரானபுதினாமல்லி சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்புதினா மல்லி சட்னியை ஒவ்வொருவர்வீட்டிலும் ஒவ்வொரு விதமாக அரைக்கும் வழக்கம் இருக்கும். எல்லா சட்னியிலும் கண்டிப்பாகபுதினா தழைகள் இருக்கும். ஆனால் எல்லா சட்னிக்கும் வித்தியாசமான சுவை இருக்கும்.சுலபமான முறையில் வித்தியாசமான புதினா மல்லி சட்னி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம்நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்க வீட்ல புதினா மல்லி சட்னியை இப்படி அரைத்தால்வீட்டில் இருப்பவர்கள் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையானசட்னி ரெசிபி உங்களுக்காக. நம் பாரம்பரியமாக செய்துவரும் உணவுகளில் மல்லி , புதினாவும் ஒன்று. ஆனாலும் நிறைய பேருக்கு இந்த புதினா மல்லிசட்னி என்பது அந்த அளவிற்கு விருப்பமான ஒன்றாக இருக்காது.

Ingredients:

  • 2 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 கப் புதினா
  • 1 கப் கொத்தமல்லி
  • உப்பு
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு
  • 1 தேக்கரண்டி காய்ந்தமிளகாய்
  • புளி கொஞ்சம்
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 மிக்ஸி

Steps:

  1. வெங்காயம் தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புதினா கொத்தமல்லியினை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தபருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து கொண்டு தனியாக வைக்கவும்.
  2. பிறகு அதே கடாயில் வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் கடைசியில் புதினா, கொத்தமல்லி சேர்த்து மேலும் ஒரு நிமிடங்கள் வதக்கவும். இதனை சிறிது நேரம் ஆற வைத்து கொள்ளவும்.
  3. மிக்சியில் முதலில் வறுத்த பொருட்கள் சேர்த்து புளியினை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
  4. அரைத்த கலவையுடன் வதக்கி வைத்துள்ள பொருட்கைள தேவையான அளவு உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து .அதையும் நன்கு அரைத்து கொள்ளவும்.
  5. தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை சட்னியில் கொட்டவும், சுவையான சட்னி ரெடி. இது தோசை இட்லிக்கு பொருத்தமாக இருக்கும்.