கிராமத்து ஸ்டைலில் எள்ளு சாதம் செய்வது எப்படி ?

Summary: நச்சத்திர ஹோட்டல்களில் பன்னாட்டு உணவுகளை ருசித்திருந்தாலும்கூட, நம் கிராமிய உணவுகளின் சுவையே நம்மில் பலரையும் ஈர்க்கும். கிராமிய உணவுகளில் இடம்பெறும் ஒவ்வோர் உணவுக்கும் கதை உண்டு. தனி சுவையும் உண்டு அந்த மண்ணுக்குரிய மகத்துவமும் உண்டு அத்தகைய அருமையான உணவுகளின் ஒன்றான எள்ளு சாதம் வீட்டில் ஒருமுறை செய்து பருக்கள் சாப்பிடுவதற்கு மிகவும் அருப்புதமாக இருக்கும்.

Ingredients:

  • 1 கப் சாதம்
  • 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கருப்பு எள்
  • 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணைய்
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • காய்ந்தமிளகாய்
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் சாதத்தை உதிர் உதிராக வடித்தெடுத்து ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு நன்றாக ஆறவிடவும்.
  2. பிறகு வாணலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து அதனுடன் எள் சேர்த்து வெடித்ததும் இறக்கி ஆறவைத்துப் பொடித்துக்கொள்ளவும்.
  3. பிறகு ஒரு வாணலில் எண்ணைய் விட்டு கடுகு,உளுந்து, கடலைப்பருப்பு, போட்டு சிவந்ததும், காய்ந்தமிளகாயை தேவைக்கேற்ப கிள்ளி போடவும்.
  4. இதனுடன் கருவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளரி விட்டு வதக்கி கொள்ளவும்.
  5. பின் உதிராக வைத்துள்ள சாதத்தையும் போட்டு தீயை குறைவாக வைத்து அதனுடன் அரைத்து வைத்துள்ள எள் பொடியை சேர்த்து கலந்து, சாதம் நன்கு சூடேறியதும் இறக்கி பரிமாறவும்.