இட்லி மாவு இருக்க அப்போ 5 நிமிடத்தில் மெது வடை காலை டிபனுக்கு இப்படி செய்து பாருங்க!

Summary: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மெது வடை என்றாலே மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ். அதிலும் மாலை நேரத்தில் டீ, காபியுடன், இந்த மெது வடை சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.வழக்கம் போல் இல்லாமல் இந்த மெதுவடை சுலபமாக புதிய முறையில் தான் செய்ய போகிறோம். இந்த மெதுவடை செய்வதற்க்கு மீதமான இட்லி, தோசை மாவு இருந்தாலே போதும் மொறு மொறுனு ருசியான மெதுவடை செய்து விடலாம். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • இட்லி மாவு
  • 1½ ஸ்பூன் ரவை
  • 3 டீஸ்பூன் கடலை மாவு
  • 1½ ஸ்பூன் அரிசி மாவு
  • 1 கப் வெங்காயம்
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • பேக்கிங் சோடா
  • ½ டீஸ்பூன் மிளகு
  • கொத்தமல்லி இலை
  • பச்சை மிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பௌலில் புளித்த இட்லி மாவு வடை செய்வதற்கு தேவையான அளவு, ரவை, கடலை மாவு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் பேக்கிங் சோடா, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகு, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், சேர்த்து நன்கு கலந்து வடை மாவு பதத்திற்கு கலந்துகொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயில் பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  3. இப்பொழுது சுவையான மெது வடை தயார்.