ஆந்திரா குண்டூர் கார சட்னி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! சும்மா ஒரே மாதிரியே சட்னி வைக்காதீர்கள்!

Summary: வணக்கம் நண்பர்களே பெரும்பாலும் இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி வைத்து சாப்பிடுவோம். சட்னி னு எடுத்துக்கிட்டோம் அப்படின்னா அதுல பல வகை இருக்கு. தேங்காய் சட்னி தக்காளி சட்னி, மல்லி சட்னி புதினா சட்னி, கார சட்னி இப்படி வித விதமா சட்னி இருக்கு. பெரும்பாலும் எல்லாரும் விரும்புறது கார சட்னி அதுவும் தோசைய நல்லா முருகலா ஊற்றி கார சட்னி வச்சு சாப்பிட்டால் அறுசுவை தான். காரச் சட்னி நாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மிளகாய் வத்தல் வெங்காயம் வதக்கி அரைச்சு செய்றது தான். ஆனா இந்த பதிவுல நாம என்ன பாக்க போறோம் அப்படின்னா ஆந்ரா குண்டூர் கார சட்னி எப்படி வைக்குறதுனு பார்க்க போறோம். வாங்க சட்னி செய்றதுக்கு என்ன செயல்முறை என்னென்ன பொருள் வேணும் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 15 பூண்டு
  • 15 சின்ன வெங்காயம்
  • 10 வர மிளகாய்
  • புளி
  • உப்பு
  • தண்ணீர்
  • 2 tsp நல்லெண்ணெய்
  • 1 tsp கடுகு
  • கருவேப்பிள்ளை

Equipemnts:

  • 1 வானொலி

Steps:

  1. முதலில் எடுத்து வைத்துள்ள பூண்டை கல்லில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும். பூண்டு இன்னும் அதிகமாக சேர்த்தால் சுவையும் அதிகமாக இருக்கும். அடுத்து சின்ன வெங்காயத்தை தட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. ஜாரில், ஊற வைத்த வரமிளகாயை சேர்த்து அதோடு எலுமிச்சை அளவு புலி, தேவையான அளவு உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விடவும், அதோடு கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும், இடிச்சு வைத்த பூண்டை சேர்த்து நன்கு வதங்கிய பிறகு, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி எடுக்கவும்.
  4. பூண்டும்,வெங்காயமும் நன்கு வதங்கிய பிறகு மிளகாய், புளி பேஸ்ட்டை சேர்த்துக் கொள்ளவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு எடுத்தால் ஆந்திர குண்டூர் காரச் சட்னி தயார்.