மாலை நேர ஸ்நாக்ஸாக வாழைக்காய் பூண்டு ரோஸ்ட் ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

Summary: வாழைக்காய்என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் ஒரு காய் வகையாகும். வாழைக்காய் ரோஸ்ட்,உருளைக் கிழங்கு ரோஸ்ட் போலவே ரொம்ப ரொம்ப சுவையாக செய்யலாம். வாழைக்காய் சாப்பிட்டால்வாய்வு என்று சொல்லி அதனை பலரும் ஒதுக்கி வைத்து விடுவது உண்டு. எல்லாகாய்கறியும் ஏதோ ஒரு சத்துக்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும். வாய்வை நீக்க பூண்டுசேர்த்து சமைக்க வேண்டும். எனவே வாழைக்காயில் இருக்கும் சத்துக்களை இழக்காமல் இப்படிசெய்து பாருங்கள் கறி சாப்பிடுவது போல ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும். வாழைக்காய் பிடிக்காதவர்களுக்குகூட இந்த வகையில் செய்து கொடுத்தால் ஒரு கொஞ்சம் கூட மிஞ்சாது. மிகவும் எளிதாக செய்யக்கூடிய இந்த வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்தபதிவை நோக்கி பயணிப்போம்.

Ingredients:

  • 1 வாழைக்காய்
  • 5 பூண்டு
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி பெருங்காயம்
  • 1 வெங்காயம்
  • மிளகு தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கடுகு
  • சீரகம்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பூண்டுடன் பொடி வகைகள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  2. வாழைக்காயை தோல் நீக்கி, சதுரமாக நறுக்கி வைக்கவும்.
  3. தாராளமாக எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, பின்பு வாழைக்காயை சேர்த்து வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பூண்டு கலவை சேர்த்து பிரட்டி நீர் விட்டு வேக விடவும்.
  5. நன்கு வெந்ததும், மேலும் எண்ணெய் விட்டு பிரட்டி எடுக்கவும். அடி பிடிக்காத அளவு கிளறிவிட்டு பரிமாறவும்.