பருப்பு, வெங்காயம், தக்காளி, எதுவும் சேர்க்காமல் கீரை மசியல் 5 நிமிஷத்துல இப்படி செய்து பாருங்க!

Summary: கீரை வாங்கினா ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சைவ பிரியர்கள் மட்டுமல்ல இனி அசைவ பிரியர்கள்கூட இந்த கீரையின் சுவைக்கு அடிமை.கீரையில்எண்ணற்ற சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக குழந்தைகள் கீரையில் விரும்பிசாப்பிடுவது கிடையாது. பெரியவர்கள் கூட சைவம் சாப்பிடுபவர்கள் கீரையை விரும்பி சாப்பிடுவார்கள். அசைவ பிரியர்களுக்கு பெரும்பாலும் கீரை என்றாலே ஏதோ சாப்பிடக் கூடாத பொருளை சாப்பிடுவதுபோல தான் முகத்தை சுழிப்பார்கள். இது போல ஒரு முறை கீரையில் மசியல் செய்து கொடுத்துப்பாருங்க எல்லோரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.வெறும் கீரையை வைத்து மட்டும்இந்த மசியல் செய்யப் போகின்றோம். இதனுடன் பருப்பு வெங்காயம் தக்காளி எதுவுமே சேர்க்கபோவது கிடையாது.

Ingredients:

  • 1 கட்டு கீரை
  • 5 மிளகாய் வற்றல்
  • உப்பு
  • 2 விரல் அளவு புளி
  • கடுகு
  • சீரகம்
  • உளுந்து
  • கடலைப்பருப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கீரையைச் சுத்தம் செய்து கால் கப் அளவு நீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
  2. வெந்ததும் அதனுடன் புளியைச் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து ஆறவிடவும்.
  3. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  4. மிக்ஸியில் கீரையுடன் தாளித்தவற்றைச் சேர்த்து தேவையான நீர் விட்டு நைசாக அரைக்கவும்.
  5. சட்னி பதத்திலிருக்க வேண்டும். (உப்பு,புளி, காரம் சரிபார்த்துக் கொள்ளவும்). சுவையானகீரை மசியல் தயார்.