காலிபிளவர் வைத்து இப்படி ப்ரை செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும் மிச்சமாகாது!

Summary: முட்டை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு. பொதுவாக முட்டைகளை வித விதமான முறையில் சமைத்து உண்டு இருப்போம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான காலிபிளவர் முட்டை பெப்பர் ஃப்ரை. இந்த காலிபிளவர் முட்டை பெப்பர் ஃப்ரையை சுட சுட சாதத்தில் ஊற்றியோ, அல்லது மற்ற சாதத்திர்க்கு சைடிஷ் ஆகவோ நாம் உண்ணலாம்.

Ingredients:

  • 3 முட்டை
  • 1 கப் காலிஃபிளவர்
  • 2 டீஸ்பூன் மிளகாயத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
  • உப்பு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. வெந்நீரில் காலிஃப்ளவரை மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும்.
  4. தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் மூடி வைத்து வதக்கவும். பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளவும்.
  5. பின்பு இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. காலிஃப்ளவர் எக் பெப்பர் ஃப்ரை ரெடி. சப்பாத்தி, சாதம், நான், பரோட்டா வுடன் சூப்பராக இருக்கும்.