வீடே மணமணக்கும் வகையில் ருசியான வெள்ளை பூசணி சாம்பார் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

Summary: கோடைக்கு ஏற்ற உடலுக்கு ஆரோக்கியமான வெள்ளை பூசணி சாம்பார். வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். ஆகையால் நாம் வீட்டில் அடிக்கடி சேயும் உணவான சாம்பாரில் வெண் பூசணி சேர்த்து சமைத்து எடுத்துக்கொண்டால் உடலுக்கும் ஆரோக்கியம், மற்றும் சுவையும் அலாதியாக இருக்கும். மேலும் வெள்ளை பூசணி இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் நமக்கு வாரம் ஒரு முறையாவது கிடைப்பது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. சுவையான வெள்ளை பூசணி சாம்பார் ரெசிபியை சுலபமாக வைப்பது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Ingredients:

  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 2 கப் தண்ணீர்
  • 1 tsp மஞ்சள் தூள்
  • 1 tsp எண்ணெய்
  • 1 tsp கடுகு
  • 1/2 tsp உளுந்தம் பருப்பு
  • 1 tsp சீரகம்
  • 1 கப் வெள்ளை பூசணி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 tsp சாம்பார் பொடி
  • 1/4 tsp பெருங்காயத்தூள்
  • கருவேப்பிலை
  • 2 வரமிளகாய்
  • 1 தக்காளி
  • 1 tsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 tsp புளிச்சாறு
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 பிரஷர் குக்கர்
  • 1 வாணலி

Steps:

  1. முதலில் துவரம் பருப்பை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து, பருப்பை மத்து
  2. பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கியதும், வெள்ளை பூசணியை சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
  4. பின்பு அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் மசித்து வைத்துள்ள பருப்பு, புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக 5-8 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், வெள்ளை பூசணி சாம்பார் ரெடி.