மதிய உணவுக்கு கருனைகிழங்கு மசியல் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!

Summary: அசத்தலான சுவையுடைய கருணைக்கிழங்கு மசியல் ,ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்க. கிழங்கு வகைகளிலே உருளைக்கிழங்கை தான் நாம் வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிடுவோம். கருணைக்கிழங்கிலும் சாம்பார், புளிக்குழம்பு, மசியல்னு நிறைய செய்யலாம். குறிப்பாக மசியல் அதீத சுவையுடன் இருக்கும். சாம்பார், பருப்பு ரசத்துக்கு மேட்சான சைட் டிஷ் இது. அதோடு கருணைக்கிழங்கு மருத்துவம் நிறைந்ததும்கூட.

Ingredients:

  • 1/2 KG கருனைக்கிழங்கு
  • 2 தக்காளி
  • சிறிது புளி
  • 1 Tsp மஞ்சள் தூள்
  • 1 1/2 Tbsp மிளகாய் தூள்
  • உப்பு
  • 2 Tsp மல்லி தூள்
  • 4 Tbsp தேங்காய் துருவல்
  • 6 சின்ன வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 Tbsp எண்ணெய்
  • 1 Tsp கடுகு
  • 1/2 Tsp உளுந்து
  • 1 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. கருணைக்கிழங்கை நன்கு கழுவி வேக வைத்து மசித்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகுஉளுந்து, கருவேப்பிலை, சி.வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  3. தாளித்தவுடன் புளிக்கரைசலை விட்டு, அதோடு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தக்காளி, உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். (புளிக்கரைசல் தண்ணியாக இல்லாமல் ஓரளவு கெட்டியாக இருக்க வேண்டும்)
  4. பின்பு மசித்து வைத்த கருணைக்கிழங்கை சேர்க்கவும். பின்பு தேங்காய்த்துறுவல் சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான கருணைக்கிழங்கு மசியல் ரெடி.