கோயம்புத்தூர் ஸ்பெஷல் கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி ?

Summary: இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் உடன் புதியதாக ஏதாவது சட்னி வைத்து சாப்பிட விருப்பப்பட்டால் நீங்கள் கண்டிப்பாக இந்த கத்தரிக்காய் சட்னியை செய்து பாருங்கள். நாம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஊர்களிலும் ஒரு சட்னி பிரபலமாக இருக்கும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கிற கத்திரிக்காய் சட்னி கோயம்புத்தூர் ஸ்பெஷல் கத்திரிக்காய் சட்னி. இதன் சுவைக்கும் பஞ்சம் இல்லை அட்டகாசமான சுவையில் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த போகி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 3 tbsp எண்ணெய்
  • ½ tbsp சீரகம்
  • ½ tbsp மல்லி
  • 12 சின்ன வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 4 தக்காளி
  • ¼ KG கத்தரிக்காய்
  • 1 உருளைக்கிழங்கு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • 3 கப் தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பருப்பு மத்து
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் கத்தரிக்காய் சட்னி செய்வதற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். கத்தரிக்காயை மட்டும் நறுக்கியவுடன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சேர்க்கவும் அப்போது தான் கத்திரிக்காய் கருக்காமல் இருக்கும்.
  2. அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து மூன்று டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காயந்ததும் அதனுடன் அரை டீஸ்பூன் மல்லி மற்றும் அரை டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும். இரண்டு நன்கு பொரிந்து வந்தவுடன்.
  3. நான் தோல் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  4. பின் ஒரு நிமிடம் கழித்து நான் நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறிவிட்டு. இதனுடன் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடுங்கள்.
  5. பின் இதனுடன் மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்து கடாயை மூடிவிட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளும் நன்றாக வெந்த பின் கடாயை இறக்கி, பருப்பு மத்து வைத்து நன்றாக கடைந்து எடுங்கள். அவ்வளவுதான் சுவையான கோயம்புத்தூர் கத்தரிக்காய் சட்னி இனிதே தயார்.