ரோட்டுக்கடை ஸ்டைல் ருசியான தக்காளி குழம்பு இப்படி செய்து பாருங்க அதே சுவையில்!

Summary: ரோட்டுக்கடைகளில் சாப்பிடுவதே தனி ருசிதான். அதிலும் நாம் ரோட்டுக்கடைகளில் இட்லி,தோசைக்கு கொடுக்கப்படும் தக்காளி குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் இந்த மாரி செய்து சாப்பிட்ருக்க மாட்டோம். ஏனென்றால் அது எப்படி செய்யனும் என்று பலருக்கும் தெரியாது. இனி அந்த கவலை வேண்டாம் ரோட்டுக்கடைகளில் கொடுக்கப்படும் தக்காளி குழம்பு அதே சுவையில் இனி நாம்பளும் செய்து விடலாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து ருசித்திடுகள். இந்த தக்காளி குழம்பு இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்றவற்றைக்கும் சேர்த்து சாப்பிடலாம் அற்புதமாக இருக்கும்.

Ingredients:

  • 4 தக்காளி
  • 12 சின்ன வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • 1 பச்சை மிளகாய்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1½ டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
  • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை
  • ½ ஸ்பூன் பெருங்காய பொடி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Steps:

  1. முதலில் தக்காளி பழத்தில் தூள்களை நீக்கி கெட்டிப்பத்தையும் நீக்கவும். பிறகு நறுக்கிக்கொள்ளவும்.
  2. ஒரு குக்கரில் தோல் நீக்கி நறுக்கிய தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், மஞ்சள் தூள், சாம்பார் பொடி, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து முழுகும் அளவிற்கு தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு வேக விடவும்.
  3. பிறகு அதனை கடைந்து எடுத்துக்கொள்ளவும்.
  4. அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். உளுத்தம் பருப்பு பொன்னிறமாக சிவந்ததும் கடைந்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 1 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கருவேப்பிலை, பெருங்காயப்பொடி சேர்த்து உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும். சிறிதளவு வெள்ளம் சேர்த்துக்கொள்ளவும்.
  5. குழம்பு தன்னியக்க இருக்கும் அப்பொழுது கொஞ்சம் அரிசி மாவு தண்ணீரில் கலந்து சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
  6. இப்பொழுது சுவையான றோட்டுக்கடை தக்காளி குழம்பு தயார்.