காலை டிபனுக்கு ருசியான மரவள்ளி பணியாரம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் அடிக்கடி செய்வீங்க!

Summary: ஒரு வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே சில வகையான காய்கறிகள், கிழங்குகள் மற்றும் பழங்கள் அதிகமாக கிடைக்கும்.அவ்வாறு மரவள்ளி அதிக அளவில் கிடைக்கிறது. மரவள்ளி கிழங்கு அப்படியே வேக வைத்துசாப்பிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும். இந்த மரவள்ளி கிழங்கு வைத்து பாயாசம், சிப்ஸ்போன்ற உணவுகளையும் சமைக்க முடியும். அப்படி சட்டென செய்யக்கூடிய, சுட சுட அனைவரும்விரும்பி சாப்பிடக்கூடிய இந்த மரவள்ளி பணியாரமும் செய்ய முடியும். மாலை டீ குடிக்கும்நேரத்தில் இதனையும் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அவ்வளவு சூப்பராக இருக்கும்.இந்த மரவள்ளி பணியாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Ingredients:

  • 1 மரவள்ளிக்கிழங்கு
  • துருவிய தேங்காய்
  • காய்ந்த மிளகாய்
  • உப்பு
  • சோம்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்

Steps:

  1. கிழங்கை நன்கு கழுவி தோலை நீக்கி விட்டு கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. மிக்ஸியில் தேங்காய்த்துருவல், மிளகாய், சோம்பு அனைத்தையும் போட்டு தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. அதனுடன் துருவிய மரவள்ளிக்கிழங்கு, உப்பு சேர்த்து மேலும் இரண்டு முறை அரைக்கவும். அரைத்த மரவள்ளிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக் வைத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியால் மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகம் அளவு ஊற்றவும்.
  5. பிறகு தீயை மிதமான அளவில் வைத்து பணியாரங்களை இருப்புறமும் வேக விட்டு எடுக்கவும். எளிதில் செய்யக்கூடிய மரவள்ளிக்கிழங்கு பணியாரம் தயார்.