இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு இனி கும்பகோணம் கடப்பா இப்படி செஞ்சு பார்ப்போமே!

Summary: ஒவ்வொரு ஊருக்கும்ஒவ்வொரு விதமான தனித்துவம் உண்டு அதில் சமையல் கலையில் வித்தியாசமான முறையில் அவரவர்ஊரில் சில பிரசித்தி பெற்ற சமையல் வகைகள் இருக்கும். அப்படியான ஒரு வித்தியாசமானகும்பகோணம் கடப்பா ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.சிறு பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கடப்பா இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்றுஎல்லாவற்றுக்குமே சைட் டிஷ் ஆக தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அவ்வளவு ருசியாக இருக்கும். தினமும் இட்லி, தோசை செய்வதென்பதுஅனைவரின் வீட்டிலும் வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதற்காக தொட்டுக்கொள்ள தினமும்ஏதாவது ஒரு சைடிஷ் செய்து கொண்டிருக்கின்றனர்.

Ingredients:

  • 1 பெரிய வெங்காயம்
  • 20 சின்ன வெங்காயம்
  • 50 கிராம் பட்டாணி
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 மூடி தேங்காய் துருவல்
  • 50 கிராம் பாசிப்பருப்பு
  • 2 ஏலக்காய்
  • 2 முந்திரி
  • 2 துண்டு பட்டை
  • 1 கிராம்பு
  • 1/2 அங்குலத் துண்டு இஞ்சி
  • 2 பூண்டு
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • பாதி பிரிஞ்சி இலை
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 2 கொத்து கொத்தமல்லித் தழை
  • 1/2 தேக்கரண்டி உப்பு
  • 1/2 மூடி எலுமிச்சை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்

Steps:

  1. உருளைக்கிழங்கு மற்றும் இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும். துண்டுகளாக நறுக்கி தக்காளியை வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். சிள்ள வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
  2. குக்கரில் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், அரை தேக்கரண்டி உப்பு, பாசிப்பருப்பு, பச்சை மிளகாய், பட்டாணி போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வெயிட் போட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  3. மிக்ஸியில் தேங்காய், இஞ்சி, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு, கசகசா போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு மற்றும் பிரிஞ்சி இவை போட்டு தாளிக்கவும்.
  5. சோம்பு பொரிந்ததும் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியைப் போட்டு வதக்கி, பிறகு அரைத்த விழுதை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி லேசாக கொதிக்கவிடவும்.
  6. கொதி வந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறிவிடவும். அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பாசிப்பருப்பு கலவையை மசித்துவிட்டு சேர்க்கவும்
  7. 4 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லித் தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு கிளறிவிடவும். சூடான கடப்பா தயார்.