பாரம்பரிய தமிழரின் வல்லாரைக் கீரை துவையல் செய்வது எப்படி ?

Summary: வல்லாரை கீரை உடலுக்கு மிகவும் நல்லது குறிப்பாக மாணவர்கள் வல்லாரை கீரை சாப்பிட்டால் அவர்களின் நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வல்லாரை கீரை அடிக்கடி சமைத்துக் கொடுத்தால் அவர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் வல்லாரை கீரையில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர் சத்துக்கள், மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடைங்கியுள்ளன.ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை சரிவிகித அளவில் கொண்டுள்ளது. வல்லாரை கீரையை கொண்டு சாம்பார், துவையல் என்று செய்யலாம்.இதில் வல்லாரை கீரை துவையல் இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 2 வரமிளகாய்
  • 2 கப் வல்லாரை கீரை
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
  • 1 டேபிள் ஸ்பூன் வெல்லம்
  • 1 டேபிள் ஸ்பூன் புளிச்சாறு
  • உப்பு

Equipemnts:

  • கடாய்
  • மிக்ஸி

Steps:

  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, மிளகு, வரமிளகாய், மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  2. பின் அதில் வெங்காயம், பூண்டு, சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி இறக்கி வைக்க வேண்டும். அதை தட்டில் போட்டு சிறுது நேரம் குளிர வைக்க வேண்டும்.
  3. பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வல்லாரைக் கீரையை போட்டு 2 நிமிடம் வதக்கவும், பின் அதில் தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
  4. பிறகு மிக்ஸர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லம், புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான வல்லாரை கீரை துவையல் தயார்.