சண்டே ஸ்பெஷல் நெத்திலி மீன் திதிப்பு இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

Summary: அசைவ வகைகளிலேநம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். அதிலும் இந்த சின்ன,சின்ன மீன் வகைகளில் தான்  தேவையான சத்துக்கள்அதிகம் நிறைந்துள்ளது. அந்த வையில் இந்த நெத்திலி மீனில் புரதம், ஆனால் இதன் சுவையோஅவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீனை வழக்கம் போல் புளி சேர்க்காமல் சமைக்க போகின்றோம்.இதன் பெயர் நெத்திலி மீன் திதிப்பு. தித்திப்பு என்றதும் வெல்லம் சேர்த்து சர்க்கரைசேர்த்து செய்ய போகின்றோம் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு பாரம்பரியமான மீன் குழம்புரெசிபிங்க. பாரம்பரியமான முறையில்செய்து கொடுத்த உணவுகள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமானதாக, ருசியானதாக இருந்திருக்கிறது

Ingredients:

  • 1/4 கிலோ நெத்திலி மீன்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 4 பச்சை மிளகாய்
  • 5 தேக்கரண்டி சாம்பார் பொடி
  • 1/2 கப் தேங்காய் பொடியாக நறுக்கியது
  • கறிவேப்பிலை
  • பட்டை, லவங்கம், சோம்பு
  • 50 மில்லி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி உப்பு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. நெத்திலியை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு கலந்து பிரட்டி வைக்கவும். தேங்காயை நைசாக அரைத்து வைக்கவும்,
  2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம் தாளிக்கவும்.
  3. இதில் கறிவேப்பிலை சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி குழைந்ததும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, சிறிது நீர் விட்டு மசாலா வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
  5. இதில் மீனை சேர்த்து மூடி வேக விடவும். கடைசியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சுவையான நெத்திலி மீன் திதிப்பு தயார்.