வாயில் வைத்தவுடன் கரையும் சுவையில் கேரட் அல்வா மிஸ் பண்ணாம இப்படி செய்து பாருங்க!

Summary: அல்வா என்றதுமே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது திருநெல்வேலி அல்வா தான். திருநெல்வேலி இருட்டுக் கடைஅல்வா என்றால் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல் தான் காரட் வைத்து செய்யும்இந்த காரட் அல்வாவும்இதன் சுவை பிரமாதமாக இருக்கும். அது மட்டும் இன்றி மற்ற அல்வாக்களை போல் இல்லாமல்,இதை செய்வது மிக மிக சுலபம் செலவும் மிகக் குறைவு, நேரமும் குறைவு காரட் அல்வா வீட்டிலேயே எப்படி எளிமையான முறையில்  அல்வா தயாரிப்பது? என்பதை தான் இந்தபதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். நாவில் வைத்ததும் கரைந்து போகும் சுவையானகாரட் அல்வா எப்படி செய்வது? இனி பார்ப்போம்..

Ingredients:

  • 1/2 கிலோ காரட்
  • 1 கப் சர்க்கரை
  • 25 கிராம் பால் பவுடர்
  • 1/2 கப் நெய்
  • 10 முந்திரிபருப்பு
  • 10 பாதாம்
  • 5 ஏலக்காய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. காரட்டை துருவி ஒரு தேக்கரண்டி நெய்யில் வதக்கி பாலும், தண்ணீரும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
  2. ஆறவிட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். வாணலியில்அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும்.
  3. சர்க்கரை,பால் பவுடரை நன்கு கலந்து வைக்கவும். கிளறும் விழுது சற்று கெட்டியானதும் சர்க்கரைக் கலவை சேர்த்து கைவிடாமல் கிளறவும். கேஸை சிம்மில் வைக்கவும்.
  4. நன்குசேர்ந்து கொண்டதும், நெய்யைச் சிறிது சிறிதாக விடவும். 7. ஹல்வா பதம் வந்ததும் ஏலப்பொடி, நெய்யில்வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து இறக்கவும்.