கொங்கு நாடு சுவையான மட்டன் குழம்பு செய்வது எப்படி ?

Summary: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மட்டனை வைத்து வேறுமாதிரியான ரெசிபிகள் தயார் செய்வார்கள் அப்படி வைக்கப்படும் ஒவ்வொரு மட்டன் ரெசிப்பிகளுக்கும் ஒரு தனி வகையான ருசியும், மணமும் கொண்டும் இருக்கும். அந்த வகையில் கொங்கு நாடு மட்டன் குழம்பு மிகவும் பிரபலமானது என்று சொல்லலாம். ஆகையால் இப்படி ஒரு நாள் உங்கள் வீட்டில் மட்டன் குழம்பு வைத்துப் பாருங்கள் இதன் சுவை உங்கள் வீட்டில் உள்ள சிறிய குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக மாறிவிடும். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மறுமுறையும் இதே போல் மட்டன் குழம்பு செய்யும்படி உங்களிடம் கேட்பார்கள்.

Ingredients:

  • 2 tbsp சீரகம்
  • 1 tbsp மிளகு
  • 10 வர மிளகாய்
  • 3 tbsp மல்லி
  • 200 கிராம் சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 2 துண்டு இஞ்சி
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 3 tbsp எண்ணெய்
  • ½ tbsp சோம்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 7 சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 KG மட்டன்
  • 1 tbsp மஞ்சள் தூள்
  • வதக்கி அரைத்த மசாலா
  • தண்ணீர்
  • உப்பு
  • கொத்த மல்லி

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் கொங்குநாடு மட்டன் குழம்பு செய்ய தேவையான மசாலா அரைக்க வேண்டும் அதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் சீரகம், மிளகு, வர மிளகாய் மற்றும் மல்லி சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
  2. அனைத்து பொருட்களும் நன்றாக வறுபட்டதும் நல்ல மணம் வரும் மணம் வந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின்பு அதே கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நாம் தோலுரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
  3. பின் வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவல் நன்கு வறுபட்டதும். இந்த பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து குளிர வையுங்கள். அனைத்து பொருட்களும் நன்றாக குளிர்ந்ததும் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள்.
  4. பின்பு குக்கரை அடுப்பில் வைத்து மூன்று டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் சோம்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு இதனுடன் ஏழு சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் வெங்காயத்தை நன்கு கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
  5. பின்பு வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நாம் வைத்திருக்கும் மட்டனையும் இதனுடன் சேர்த்து நன்கு கிளறிவிட்டு ஒரு டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். மட்டனை ஒரு இரண்டு நிமிடங்கள் நன்றாக வேக வைத்து. பின் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
  6. பின்பு குக்கரை மூடி விட்டு 7 விசில் வரும் வரை அடுப்பில் வேக வைத்துக் கொள்ளுங்கள். 7 விசில் வந்ததும் பின் குக்கரை இறக்கி அதனுடன் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி கிளறி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான கொங்குநாடு மட்டன் குழம்பு தயார்.