தக்காளி சேர்க்காமல் ருசியான மாங்காய் ரசம் இப்படி செய்து சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட அசத்தலாக இருக்கும்!

Summary: ரசம் பல வகைஉண்டு . ரசம் இல்லாமல் ஒரு விருந்து முழுமையடையாது. இப்படிப்பட்ட ரசம் அனைத்து வீடுகளிலும்சுலபமாக செய்யப்படுகிறது தக்காளியின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் தக்காளியைசேர்க்காமல் ஒரு ரசம் தான் இந்த சுவையான மாங்காய் ரசம். மாங்காய் ரசம் ருசியில் அருமையாகஇருக்கும்.. இதனை சுடச்சுட சாதத்தில் சேர்த்துப் பிசைந்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.மாங்காய் ரசம் செய்வதற்கு நேரமும் குறைவாகத் தான் செலவாகும். சளி, இருமல் தொந்தரவை விரட்டியடிக்க கூடிய சக்தி இந்த ஒரு மாங்காய் ரசத்திற்கு உண்டு. மிளகை தூக்கலாக சேர்த்து இந்த அளவுகளில் நீங்கள் ஒருமுறை  வச்சு பாருங்க இருமலும், சளியும் எங்க போச்சுன்னு உங்களுக்கே தெரியாது.

Ingredients:

  • 1/4 கப் துவரம் பருப்பு
  • 1 மாங்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கைப்பிடி மல்லித் தழை
  • 1 மேசைக்கரண்டி சீரகம்
  • 3 பற்கள் பூண்டு
  • 1/4 தேக்கரண்டி மிளகு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • வரமிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Steps:

  1. ஒரு சிறிய குக்கரில் மாங்காய், , துவரம் பருப்புமஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  2. ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து கரண்டியால் மசித்துக் கொள்ளவும். பூண்டு ,சீரகம், மிளகு மற்றும் பாதி அளவு மல்லித் தழை சேர்த்து சிறிய உரலில் போட்டு இடித்து வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, பெருங்காயத் தூள் போட்டு இடித்தவற்றைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
  4. அத்துடன் வேக வைத்து மசித்து வைத்துள்ள மாங்காய் கரைசலைச் சேர்க் உப்பு போட்டு தேவையான அளவு சுடுநீர் ஊற்றவும்.
  5. அனைத்தும் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் மல்லித் தழையைக் கிள்ளிப் போட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். மாங்காய் சுவையுடன் ரசம் தயார்.