கமகமனு முட்டை சாப்ஸ் இப்படி கூட செய்யலாம் சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட பக்காவா இருக்கும்!

Summary: அசைவம் சமைக்கமுடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு அசைவ சமையலைசாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். சுவையான முட்டை சாப்ஸ் சூடான சாதத்துடன் தொட்டுசாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் இட்லி, தோசை,சப்பாத்தி, பூரி என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கு கூட நல்ல ஒரு காம்பினேஷனாக இருக்கக்கூடியஇந்த முட்டை சாப்ஸ் செய்யும் பொழுது இந்த வீட்டில் உள்ள பொருளை இந்த செய்முறையில் சேர்த்துசெய்தால் ருசி வீட்டையே ஒரு வழி செய்யும். இந்த முட்டையைவைத்து அசைவ குழம்பே தோற்றுப் போகக் கூடிய வகையில் சூப்பரான ஒரு முட்டை சாப்ஸ் எப்படிசெய்வது என்று தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.தேவையானபொருள்கள்

Ingredients:

  • 4 முட்டை
  • 6 தக்காளி
  • 20 சின்ன வெங்காயம்
  • 1 முழுபூண்டு
  • 4 பச்சைமிளகாய்
  • 1 பட்டை
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 1 குழிக்கரண்டி எண்ணெய்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி தனியாதூள்
  • உப்பு
  • பெருங்காயதூள்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தக்காளியை பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் ஒரு சுற்றுக்கு மட்டும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே போல் பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றையும் தனித்தனியாக அரைத்து வைக்கவும்.
  2. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பட்டை தாளிக்கவும்
  3. பின்னர் பூண்டு, பச்சைமிளகாயை சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.  நிறம்மாற ஆரம்பித்ததும் சின்ன வெங்காய விழுதினை சேர்த்து வதக்கவும். அத்துடன் தூள் வகைகளை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  4. அரை டம்ளர் தண்ணீர் விட்டு தக்காளி மசிந்து வரும் வரை சிறுதீயிலேயே வதக்கவும்.  அவித்தமுட்டைகளை பாதியாக நறுக்கி வைக்கவும்.
  5. ஒரு தட்டில் முதல் லேயராக சாப்ஸ் வைத்து அதன் மேல் முட்டைகளை கவிழ்த்தாற் போல் வைத்து அதன் மேல் மீதமுள்ள சாப்ஸையும் வைத்து அரைமணி நேரம் மசாலா ஊறும் வரை வைத்திருக்கவும்.