சுவையான கோதுமை கல்யாண கேசரி செய்வது எப்படி ?

Summary: மணமணக்கும் வகையில் கேசரி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தாலும் அவர்கள் விரும்பி தான் சாப்பிடுவார்கள். இருந்தாலும் கல்யாண வீடுகளில் செய்யும் கேசரி போல் வராது. ஏனென்றால் கல்யாண வீடுகளில் கேசரி செய்து வைத்திருந்தால் நாம் வீட்டு நபர்கள் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். ஆனால் இனி இந்த கவலை உங்களுக்கு வேண்டாம் கல்யாண வீட்டில் வைப்பது போன்ற உங்கள் வீட்டில் கேசரி எப்படி செய்வதென்று தான் பார்க்க இருக்கிறோம் அதுவும் கல்யாண கேசரி சுவவையில் கோதுமை கேசரி. இதுபோன்று ஒரு முறை நீங்கள் உங்கள் வீட்டில் கேசரி செய்து உங்கள் வீட்டில் அனைவருக்கும் கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் வீட்டில் உள்ள சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு இனிப்பு வகையாக மாறிவிடும்.

Ingredients:

  • 5 tbsp நெய்
  • 10 முந்திரி பருப்பு
  • 12 உலர் திராட்சை
  • 1 கப் கோதுமை ரவா
  • 3 கப் தண்ணீர்
  • 1 கப் துருவிய வெல்லம்
  • 1 கப் தண்ணீர்
  • ¼ tbsp ஏலக்காய் தூள்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 டீ பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. கோதுமை கல்யாண கேசரி செய்வதற்கு முதலில் கடாயை அடுப்பில் வைத்து ஐந்து டீஸ்பூன் அளவு நெய் ஊற்றிக் கொள்ளவும். பின் நெய் உருகி நன்கு காய்ந்ததும் நாம் வைத்திருக்கும் 10 முந்திரி பருப்புகளை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  2. பின் முந்திரி பருப்பு பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அதை நெய்யில் 12 உலர் திராட்சைகளையும் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு மீதம் இருக்கும் நெய்யில் ஒரு கப் அளவிலான கோதுமை ரவா சேர்த்து நன்கு வறுக்கவும் கோதுமை ரவை நன்கு வறுபட்டு மணம் வரும்பொழுது இதனுடன் மூன்று கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கிளறி விடவும் பின்பு ரவை வெந்து கெட்டியான பதத்திற்கு வந்தவுடன்.
  4. இதனுடன் வெல்ல பாகு சேர்க்க வேண்டும் அதற்கு ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் துருவிய வெல்லம் சேர்த்து, ஒரு கப் அளவு தண்ணீரும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். வெல்லம் நன்கு உருகி வந்ததும் வடிகட்டியை வைத்து வடிகட்டி வெல்லத்தை நேரடியாக கடாயில் ஊற்றி கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்.
  5. பின்பு கேசரியை நன்கு கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும் கேசரியில் உள்ள தண்ணீர் முழுவதுமாக வற்றி கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் நாம் முதலில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  6. பின் அடுப்பு அணைத்து கடாயை மூடி விடுங்கள் மூன்று நிமிடம் கடாய் சூட்டிலேயே கோதுமை கேசரி நன்றாக வெந்து கெட்டியான பதத்திற்கு வந்துவிடும். அவ்வளவுதான் சுவையான கோதுமை கல்யாண கேசரி இனிதே தயாராகிவிட்டது.