அப்படியே ஹோட்டலில் செய்வது போல பன்னீரை இப்படி சமைத்து பாருங்க! இதன் ருசியே தனி!

Summary: வளர்கின்ற குழந்தைகளுக்கு புரதச்சத்து மிகவும் அவசியம் தேவைப்படுகிறது.  பன்னீர், போன்ற உணவுகளில் அதிக அளவு நிறைந்திருக்கிறது.இதனை குழந்தைகள் சாப்பிட அவர்கள  வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள்முழுவதுமாக கிடைக்கிறது. ஆனால் சுவையை மட்டுமே விரும்பும் குழந்தைகளுக்கு கடாய் பனீர்ஹோட்டல்களிலும், தாபாக்களிலும் செய்யக் கூடிய அதே சுவையில் செய்து கொடுத்தால் சலிக்காமல்,தட்டாமல் விருப்பமாக சாப்பிடுபவர்கள். சப்பாத்தி இட்லி, தோசை,பூரிக்கு கடாய் பனீர் செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1/2 கிலோ பன்னீர்
  • 4 பெரிய வெங்காயம்
  • 2 குடைமிளகாய்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 அங்குலதுண்டு இஞ்சி
  • சர்க்கரை
  • 1 பல் பூண்டு
  • 5 தக்காளி
  • 1 மேசைக்கரண்டி தனியா தூள்
  • 1/2 மேசைக்கரண்டி கரம் மசாலா தூள்
  • உப்பு
  • 4 தேக்கரண்டி வெண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. பனீரை துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், குடை மிளகாயை நீளமாக நறுக்கவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்..
  2. வாணலியில் பாதி வெண்ணெய் விட்டு வெங்காயம், குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
  3. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து நைசாக அரைக்கவும்.
  4. வதக்கிய வெங்காயம், குடை மிளகாயுடன் தனியா தூள், கரம் மசாலா தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கி, தனியே எடுத்து வைக்கவும்.
  5. மீதி வெண்ணெயை வாணலியில் விட்டு, அரைத்த விழுது, உப்பு, சர்க்கரை போட்டு வதக்கவும். 6. எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை வதக்கிய பின் பனீர், வதக்கிய வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து, கலந்து 2 நிமிடம் வதக்கவும்.
  6. சுவையான கடாய் பனீர் தயார்.