கொங்கு நாடு கருவேப்பிலை சட்னி செய்வது எப்படி ?

Summary: உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த கொங்கு நாட்டு கருவேப்பிலை சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த கொங்கு நாட்டு கருவேப்பிலை சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தையும் மிகவும் பிடித்த சட்னியாக இந்த கருவேப்பிலை மாறி போகும். ஆகையால் இன்று இந்த கொங்கு நாட்டு கருவேப்பிலை சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

Ingredients:

  • 1 tbsp நெய்
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 8 சின்ன வெங்காயம்
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 ½ tbsp நிலக்கடலை சட்னி
  • 1 துண்டு புளி
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 1 கப் கருவேப்பிலை
  • 1 துண்டு இஞ்சி
  • உப்பு
  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • ½ tbsp உளுந்த பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றிக் கொள்ளவும் நெய் உருகி நன்கு காய்ந்ததும். அதில் ஒரு டீஸ்பூன் அளவு உளுந்தம் பருப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும். பின்பு இதனுடன் நாம் தோலுரித்து வைத்திருக்கும் எட்டு சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  2. பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் 3 காய்ந்த மிளகாய் மற்றும் ஒன்றரை டீஸ்பூன் அளவு வறுத்த நிலக்கடலை சேர்த்து வதக்கவும். காய்ந்த மிளகாய் நன்கு வறுபட்டதும் இதனுடன் ஒரு துண்டு புலி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி விட்டு நன்கு வதக்கி கொள்ளுங்கள் பின்பு தேங்காய் வதங்கியதும் நாம் வைத்திருக்கும் ஒரு கப் கருவேப்பிலை இலைகளை இதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
  4. கருவேப்பிலை இலைகள் நன்கு வதங்கியதும் கடாயை இறக்கி வதக்கிய பொருட்களை குளிர வையுங்கள். பின் வதக்கிய பொருட்கள் குளிர்ந்தவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
  5. பின்பு அதே கடையில் சிறிது எண்ணெய் ஊற்றி என்னை காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, இரண்டு வரமிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளிப்பு செய்து அந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான கொங்கு நாட்டு கருவேப்பிலை சட்னி இனிதே தயார்.