வாய்க்கு ருசியான கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல், ஒருமுறை இப்படி செய்து பாருங்க!

Summary: கத்தரிக்காய்சேர்த்து செய்யும் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும். கத்தரிக்காயில் இருக்கும் சத்துக்களும் நம் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது தான். எந்த வகை காய்கறியாகஇருந்தாலும் அதனை தவிர்க்காமல் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து உணவில்  சேர்த்துகொண்டு வந்தால் அதற்குரிய பலன்களும் நமக்குக் கிடைக்கும். கத்தரிக்காயில் இப்படி பலஉணவுகள் செய்தாலும் ஒரு முறை இப்படி கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல்செய்து பாருங்கள். இதன் தனிப்பட்டசுவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவுஅருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றிஇந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 4 கத்தரிக்காய்
  • 1/2 கப் முளைக்கட்டிய தட்டைப்பயறு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • உப்பு
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி
  • எண்ணெய்
  • கடுகு
  • சீரகம்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லித்தழை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கத்தரிக்காய்,வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். முளைக்கட்டிய தட்டைப்பயிறை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கிவிட்டு அதனுடன் வேகவைத்த தட்டைப்பயறை சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். எல்லாம் சேர்ந்து சுருள வெந்ததும் ஆல் பர்பஸ் பொடி, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.
  5. சத்தான கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல் தயார்.