மதுரை மண் வாசனையுடன் மட்டன் கொத்து கறி செய்வது எப்படி ?

Summary: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மட்டனை வைத்து வேறுமாதிரியான ரெசிபிகள் தயார் செய்வார்கள் அப்படி வைக்கப்படும் ஒவ்வொரு மட்டன் ரெசிப்பிகளுக்கும் ஒரு தனி வகையான ருசியும், மணமும் கொண்டும் இருக்கும். அந்த வகையில் தூங்கா நகரம் மதுரையின் மட்டன் கொத்து கறி மிகவும் பிரபலமானது என்று சொல்லலாம். ஆகையால் இப்படி ஒரு நாள் உங்கள் வீட்டில் மட்டன் கொத்து கறி வைத்துப் பாருங்கள் இந்த சுவை உங்கள் வீட்டில் உள்ள சிறிய குழந்தைகளிலிருந்து பெரியோர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக மாறிவிடும். மறுமுறையும் இதே போல் செய்யும்படி உங்களிடம் கேட்கும் படியாக இருக்கும்.

Ingredients:

  • 2 tbsp எண்ணெய்
  • 3 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ½ KG மட்டன் கொத்து கறி
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp உப்பு
  • 1 டம்பளர் தண்ணீர்
  • 2 tbsp மல்லி
  • ½ tbsp சீரகம்
  • ½ tbsp சோம்பு
  • 1 tbsp மிளகு
  • 1 துண்டு பட்டை
  • 2  கிராம்பு
  • கடல் பாசி
  • 7 வர மிளகாய்
  • 2 tbsp எண்ணெய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 3 பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
  • வேக வைத்த கொத்து கறி
  • வறுத்து அரைத்த பொடி
  • உப்பு
  • 1 கொத்து கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் அரை டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து கிளறி விட்டு வதக்கி கொள்ளுங்கள். பின்பு நான் வாங்கி வைத்திருக்கும் கொத்துக்கறியை இதனுடன் சேர்த்து கிளறிவிட்டு வதக்கி கொள்ளவும்.
  2. பின்பு இதனுடன் மிளகாய் தூள் மற்றும் அரை டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்து கிளறி விட்டு பின்பு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து நான்கு விசில் வரும் வரை அடுப்பில் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு கொத்துக்கறியில் மசாலா பொடி அரைக்க ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொளாளவும்.
  3. பின் மேலே கொடுத்துள்ள அளவில் மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, கடல்பாசி போன்ற பொருள்களை வாசனை வரும் வரை மிதமான தீயில் வைத்து வறுக்கவும் பின் இதனுடன் வர மிளகாய் சேர்த்து கருகாமல் வறுத்து எடுத்து கொள்ளுங்கள். பின் வறுத்து பொருட்களை தனியாக பவுளில் எடுத்து வைத்து குளிர வைத்துக் கொள்ளவும்.
  4. அதன் பின் நாம் வறுத்த பொருட்கள் நன்கு குளிர்ந்தவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் சோம்பு சேர்த்து வதக்கவும் பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  5. பின் வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள், தக்காளி நான்கு மசிந்து வரும் பொழுது நாம் குக்கரில் வேகவைத்த கொத்துக கறியை தண்ணீருடன் கடாயில் ஊற்றிக் கொள்ளுங்கள். பின் கிளறி விட்டு நாம் அரைத்த பொடியையும் இதனுடன் சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும்.
  6. பின்பு கொத்து கறியில் உள்ள தண்ணீர் சுண்டி வற்றும் வரை கடாயை மூடி வைத்து வேக வையுங்கள். பின்பு உப்பு சரி பார்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு கிளறி விட்டு வேக வையுங்கள். கொத்துக்கறி நன்கு வெந்து வந்ததும் நாம் வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் மதுரை மட்டன் கொத்துக்கறி இனிதே தயாராகிவிட்டது.