பேச்சுலர்ஸ் சுவையான நூடுல்ஸ் எளிதாக செய்வது எப்படி ?

Summary: காலையில் நொடியில் சமைக்க வேண்டுமானால், நூடுல்ஸ் ரெசிபிதான் சரியானதாக இருக்கும் அதிலும் பேச்சுலர்கல் காலையில் தாமதமாக எலுவார்கள் அப்போது அவர்களுக்கு காலையில் சமைப்பதற்கு நூடுல்ஸ் சரியானதாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் குழந்தைகளின் உணவு பட்டியலில் மிகவும் பிடித்த உணவாக முதலில் இருப்பது நூடுல்ஸ் தான். வீட்டில் அம்மா நூடுல்ஸ் செய்றாங்க என்று தெரிந்தால் போதும் குழந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.அவ்வளவு பிடிக்கும் நூடுல்ஸ். இந்த நூடுல்ஸ்ஸை குழந்தைகளுக்கும் செய்து தாருங்கள்.

Ingredients:

  • 500 கிராம் நூடுல்ஸ்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 டேபிள் ஸ்பூன் பட்டாணி
  • 1 கேரட்
  • 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
  • ½ டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கப் தண்ணிர்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  2. பின்பு அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளியை போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்,
  3. அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின்பு பச்சை பட்டாணி, கேரட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
  4. அதன் பின்பு அதில் நூடுல்ஸ் சேர்த்து, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி வைத்து தண்ணீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.
  5. தண்ணீரானது வற்றியதும், அதில் சோயா சாஸ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான நூடுல்ஸ் ரெடி.