டெய்லி இட்லி தோசை செய்வதற்கு ருசியான வெந்தயக் கீரை அடை இப்படி செய்து பாருங்க!

Summary: புதுவிதமாக எவ்வளவு ரெசிபிகளை கற்றுக் கொண்டாலும் அது நமக்கு பத்தாது. ஏனென்றால் வீட்டில் இருப்பவர்களைஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, இப்படி புதுசு புதுசாக தினம் ஒரு ரெசிபியை  செய்தால்தவறு கிடையாது. பெரும்பாலும் அடை என்றாலே அதில் பருப்பு இருக்கும். வெந்தயக் கீரை வைத்துவித்தியாசமான முறையில் சுவையான ஒரு அடை எப்படி செய்வது என்றுதான் இன்றைய பதிவில் நாம்தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த அடையில் வெந்தயக் கீரை  சேர்த்து சமைத்துக் கொடுக்கும் போது வீட்டில் இருப்பவர்களுக்குஉடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.அந்த வாசத்திற்கு கூட ரெண்டு சாப்பிடலாம் என்று இருக்கும்..

Ingredients:

  • 2 கட்டு வெந்தயக் கீரை
  • 1 கப் கடலை பருப்பு
  • 1/4 கப் பச்சரிசி
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி
  • பெருங்காயம்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. கடலை பருப்பையும், பச்சரிசியையும் 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு வைத்து லேசாக, கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. வெந்தயக் கீரையை வேர்கள் நீக்கிக் கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. கீரையை அரைத்து வைத்திருக்கும் மாவில் கலக்கவும், மாவில் பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளைச் சேர்க்கவும், பெருங்காயத்தையும் மாவில் சேர்க்கவும்.
  4. தோசைக் கல்லில் இந்த வெந்தயக்கீரை மாவை அடையாக தட்டிப் போட்டு சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.