முட்டைகோஸ் பயத்தம்பருப்பு கூட்டு ஹோட்டல் ஸ்டைலில் நம் வீட்டிலயே ஈஸியாக செய்யலாம்!

Summary: ஆனால் முட்டைக்கோசைவைத்து முட்டைகோஸ் பயத்தம்பருப்புகூட்டு செய்தால் எந்த வாசமும் வீசாது. அட்டகாசமான சுவையில் இருக்கும். சாதத்துக்கு தொட்டுக்க மட்டுமல்ல, சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவதற்கும் ரொம்பவே சுவையாக இருக்கும்இந்த முட்டைகோஸ் பயத்தம்பருப்பு கூட்டு செய்வதற்கு அதிக நேரம் கூட எடுப்பதில்லை. அதிகசத்துக்கள் உள்ள  முட்டைகோஸ் கூட்டு அடிக்கடிசாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தணியும். சுவையான முட்டைகோஸ் கூட்டு கமகமக்கும் மணத்துடன்எளிதாக எப்படி செய்வது? என்பது தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 1/2 கிலோ முட்டைகோஸ்
  • 1 பெரியவெங்காயம்
  • 3 தக்காளி
  • 5 பூண்டு பல்
  • 5 பச்சைமிளகாய்
  • 1/4 கப் தேங்காய்
  • 1/4 கப் பயத்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம் பொடி
  • 1 டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுந்து
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 சிட்டிகை பெருங்காய பொடி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மற்றும் பூண்டு இவைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக்கொள்ளவும் அடுத்து தேங்காய் துருவலுடன் சிறிய சீரகம் பொடியை சேர்த்து கொஞ்சம் தண்ணீர; விட்டு பேஸ்டு போல அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  2. முட்டைகோஸை சிறிய துண்டுகளாக நறுக்கி கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் பெருங்காய பொடி உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கேஸ் அடுப்பில் மிதமான தீயில் வேகவைத்து இறக்கி வைத்துக்கொள்ளவும்.
  3. அடுத்து வேறொரு பாத்திரத்தில் பயத்தம்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கால் டீஸ்பூன் மஞ்சள்பொடி மற்றும் சமையல் எண்ணெய் சேர்த்து நன்றாக வேக வைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
  4. சமைக்கும் பாத்திரத்தை வைத்து கொஞ்சம் சமையல் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைக்கவும் பிறகு எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் கடுகு உளுந்தம்பருப்பு போட்டு கருகவிடாமல் வெடித்தவுடன் நறுக்கி வைத்துள்ள பூண்டின் துண்டுகளை போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
  5. பிறகு கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும், பிறகு தயாராக வேகலைத்து வைத்துள்ள முட்டைகோசு மற்றும் பயத்தம்பருப்பை ஊற்றி நன்றாக கிளறி விட்டு மிதமான தீயில் சுமார் இரண்டு நிமிடம் மூடியிட்டு வைக்கவும்.
  6. அரைத்து தயாராக வைத்துள்ள தேங்காய் பேஸ்டை போட்டு தேவை என்றால் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடியிட்டு மீண்டும் 5 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும். அடுத்து கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு மூடியிட்டு இரண்டு நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும், சுவையான முட்டைகோஸ் பயத்தம்பருப்பு கூட்டு தயார்!!