தாறுமாறான சுவையில் குதிரை வாலி கிச்சடி செய்வது எப்படி ?

Summary: ஒரு தடவை நீங்கள்இந்த குதிரை வாலி கிச்சடியை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் உங்களை அடிக்கடி இதுபோல் செய்து தர சொல்லி தொல்லை செய்வார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு காலை உணவாக இந்த குதியை வாலி கிச்சடி மாறிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் நாம் தயார் செய்யும் இந்த குதிரை வாலி கிச்சடியில் அதிக அளவு காய்கறி சேர்த்து சமைப்பதால் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் ஒரு மாறுதலாக இந்த உணவை வாரம் ஓரு முறை நீங்கள் செய்து சாப்பிடலாம்.

Ingredients:

  • 150 கிராம் குதிரை வாலி
  • 1 tbsp நெய்
  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 10 முந்திரி பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
  • 50 கிராம் கேரட்
  • 50 கிராம் பீன்ஸ்
  • 50 கிராம் பச்சை பட்டாணி
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • 3 ½ கப் தண்ணீர்
  • 1 கைப்பிடி கொத்த மல்லி

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் 150 கிராம் அளவு குதிரை வாலியை ஒரு பெரிய பவுளில் ஒரு முறை சிறிது தண்ணீர் சேர்த்து அலசி கொண்டு மேலும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள்.
  2. பின்பு குக்கரில் ஒரு டீஸ்பூன் அளவு நெய் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும், பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் அளவு கடுகு ஒரு டீஸ்பூன் அளவுக் கடலைப்பருப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு உளுந்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் வறுத்து எடுக்கவும்.
  3. அதன் பின் கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் இதனுடன் 10 முந்திரி பருப்புகளையும் சேர்த்து முந்திரி பருப்பு பொன்னிறமாக வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  4. பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வந்தவுடன் நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கொள்ளுங்கள். பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி போன்ற காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
  5. அதன் பின் மறுபடியும் ஒரு முறை கிளறி விட்டு மூன்று அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் கிச்சடி கொதித்து வந்தவுடன் நம் ஊற வைத்திருக்கும் குதிரை வாலியை இதனுடன் சேர்த்து ஒரு கைப்பிடி கொத்த மல்லி சேர்த்து குக்கரை மூடி விடுங்கள். பின்பு குக்கரில் மூன்று விசில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான குதிரைவாலி கிச்சடி தயாராகிவிட்டது.