எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான கேரளா கத்தரிக்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க!

Summary: கத்திரிக்காயை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் கத்தரிக்காய் மருத்துவ குணம் நிறைந்தது. சுவாசக் கோளாறு நுரையீரல் கோளாறு முக்கியமாக மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக இதை சாப்பிட வேண்டும். கத்திரிக்காயை பொரியல் குழம்பு அவியல் என ஒரே மாதிரியாக செய்து சாப்பிடுவதற்கு பதில், இந்த பதிவில் உள்ள கத்தரிக்காய் தொக்கை ஒரு தரம் செய்து சாப்பிட்டு பாருங்கள். இந்த கத்தரிக்காய் தொக்கு சாப்பாடுக்கு மட்டும் இல்லாம தோசை, இட்லி, சப்பாத்த இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த கத்திரிக்காய் தொக்கின் சுவை ஒரு தனி ரகம், அது மட்டுமல்லாமல் உடலுக்கும் ஆரோக்கியமானது. வாங்க நண்பர்களே இதை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்ப்போம்.

Ingredients:

  • 3 tsp எண்ணெய்
  • 6 கத்திரிக்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 1/2 tsp சீரகம்
  • 1/2 tsp சோம்பு
  • 2 தக்காளி
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • 1 tsp குழம்பு தூள்
  • 1 tsp மல்லி தூள்
  • 1/4 tsp பெருங்காயம்
  • 1/2 tsp மஞ்சள் தூள்
  • உப்பு
  • எலுமிச்சை அளவு புளி
  • 1 டம்ளர் தண்ணீர்
  • மல்லி இலை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி ஜார்

Steps:

  1. முதலில் கத்திரிக்காயை பொடியாக நறுக்கி எடுத்துக்கொண்டு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்த கத்திரிக்காயை பொரித்து தனியாக மாற்றி எடுத்துக் கொள்ளவும்.
  2. பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், வெங்காயம் நன்கு வதங்கி நிறம் மாறிய பின் பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் சீரகம் சோம்பு சேர்த்து வதக்கவும்.
  3. அடுத்ததாக அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, மிளகாய் தூள், குழம்பு தூள், மல்லித்தூள், பெருங்காயம், உப்பு இவற்றை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  4. பின் கரைத்து வைத்த புளித்தண்ணீர் சேர்த்து கடாயை மூடி வைத்து நன்கு கொதிக்க விடவும். மூன்று நிமிடம் கழித்து கடாயை திறந்து பார்த்தால், என்னை தனியாக பிரிந்து வந்திருக்கும்.
  5. அதோடு எடுத்து வைத்த தண்ணீரை சேர்த்து, நன்கு கலந்து விட்டு கொதித்த உடன், பொறித்து வைத்த கத்திரிக்காயை சேர்த்து, ஒரு பத்து நிமிடம் குறைவான தீயில் அடி பிடிக்காமல் கலந்துவிட்டு அதனுடன் மல்லி இலை சேர்த்து கடாயை இறக்கி வைத்தால் சுவையான கத்தரிக்காய் தொக்கு தயார்.